Friday, September 5, 2014

சுப்ரீம் கோர்ட்டுக்கு எச்.எல்.தத்து புதிய தலைமை நீதிபதி ஆகிறார்




புதுடெல்லி,தினத் தந்தி வியாழன் , செப்டம்பர் 04,2014, 2:29 AM
நீதிபதி எச்.எல். தத்து சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி ஆகிறார்.

ஓய்வு பெறுகிறார்

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் ஆர்.எம்.லோதாவின் பதவிக்காலம் வருகிற 27–ந் தேதியுடன் முடிவடைகிறது.
நீதித்துறை நடைமுறையின்படி, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, அடுத்த தலைமை நீதிபதியாக தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வரும் எச்.எல்.தத்துவை நியமிக்குமாறு கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார்.

புதிய தலைமை நீதிபதி எச்.எல்.தத்து

இதைத்தொடர்ந்து, எச்.எல்.தத்துவை தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என்று கூறி, அது தொடர்பான கோப்பை பிரதமருக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளதாக அறியப்படுகிறது. எனவே, எச்.எல்.தத்து புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும், அவரது நியமனம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் 2015–ம் ஆண்டு டிசம்பர் 2–ந் தேதி வரை தலைமை நீதிபதி பதவியில் இருப்பார்.

பெங்களூர்

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட இருக்கும் எச்.எல்.தத்துவுக்கு 64 வயது ஆகிறது. 1950–ம் ஆண்டு டிசம்பர் 13–ந் தேதி பிறந்த இவர், பெங்களூரில் 1975–ம் ஆண்டு தனது வக்கீல் பணியை தொடங்கினார். 1995–ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு அவர், பின்னர் பதவி உயர்வு பெற்று 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சத்தீஷ்கார் மாநில தலைமை நீதிபதி ஆனார்.
அதன்பிறகு கேரள ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்ட அவர், 2008–ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான அமர்வுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையை தற்போது கண்காணித்து வருகிறது.

No comments:

Post a Comment