Showing posts with label விகடன் மேடை சந்துரு பதில்கள். Show all posts
Showing posts with label விகடன் மேடை சந்துரு பதில்கள். Show all posts

Thursday, March 28, 2013

விகடன் மேடை சந்துரு பதில்கள்





  ஆனந்த விகடன்:03 Apr, 2013


க.ஏழுமலை, கோட்டூர். 

 '' 'சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்’ என்கிறேன் நான். அதாவது, அரபு நாடுகளைப் போல் 'பல்லுக்குப் பல்... கண்ணுக்குக் கண்’ என்பது மாதிரி. உங்களுடைய கருத்து என்ன? மெக்காலே அடிப்படையில் உருவான இந்திய தண்டனைச் சட்டத்தில் மாற்றப்பட வேண்டிய அம்சங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? சீர்திருத்தம் தேவையெனில், என்னென்ன செய்ய வேண்டும்? சுருக்கமாகச் சொல்லுங்கள்?''

 ''சட்டங்களைக் கடுமையாக்கினால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. ஊழல் குற்றங்களைத் தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal code) போதவில்லை என்றுதான், 1971-ல் கடுமையான ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் அரசு அலுவலகங்களில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறதா? கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள். அது உண்மையோ, இல்லையோ... ஆனால், அரசு அலுவலகங்களில் உள்ள மேஜை, நாற்காலிகள்கூட லஞ்சம் கேட்காமல் இருக்காது. நீங்கள் சொல்லும் அரபு நாடுகளில் தண்டனைகள் கடுமையாக இருந் தாலும், குற்றங்கள் குறைந்துவிடவில்லை.. 

Wednesday, March 27, 2013

விகடன் மேடை சந்துரு பதில்கள்


 

விகடன் மேடை சந்துரு பதில்கள்!

 ரா.மோகன், கொற்கை. 

''உங்களுடைய மிக எளிமையான நடவடிக்கைகளை, உங்களுடன் பணியாற்றிய சக நீதிபதிகள் எப்படிப் பார்த்தார்கள்? அவர் களிடம் உங்களுக்குக் கெட்ட பெயர்தானே மிஞ்சியிருக்கும்?'' 

''ஓய்வுபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு தீவிர அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். 

என்னுடைய ஏழு வருடப் பணியில் நான் விடுப்பு எடுத்தது அந்த மூன்று வாரங்கள் மட்டுமே. 

மருத்துவமனையிலும் அறுவைசிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் என்னைச் சந்தித்த நீதிபதிகள் மொத்தம் 11 பேர் மட்டுமே. 

அதே போல் ஓய்வுபெறும் கடைசி நாள் அன்று எனது சேம்பருக்கு வந்து வாழ்த்து சொன்னவர்கள் 10 பேர் மட்டுமே.

 தற்போது ஹைகோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 47 என்பதை மனதில்கொள்ளவும்!'