தி இந்து ,சனி, நவம்பர் 16, 2013
ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர். பானுமதி இன்று (சனிக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் சையத் அகமத், பானுமதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சமீபத்தில், அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் சந்தரா டாடியா தனது பொறுப்பில் இருந்து ஒய்வு பெற்றார்.
இதனை தொடர்ந்து, 58 வயதான பானுமதி இன்று பதிவுயேற்றுக்கொண்டார்.
இவர் 2003-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் பலர் பங்கேற்றுக்கொண்டனர்.