Showing posts with label ஜெ. சொத்து குவிப்பு வழக்கு:. Show all posts
Showing posts with label ஜெ. சொத்து குவிப்பு வழக்கு:. Show all posts

Wednesday, June 25, 2014

ஜெ. சொத்துகளை மதிப்பீடு செய்ததில் குளறுபடி: பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் 4-வது நாளாக இறுதிவாதம்


தி இந்து:புதன், ஜூன் 25, 2014

ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பீடு செய்ததில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரும், மதிப்பீட்டுக் குழுவினரும் குளறுபடி செய் துள்ளனர் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் 4-வது நாளாக தனது இறுதிவாதத்தை எடுத்துரைத்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத் துக்குவிப்பு வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலை யில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் வழக்கறிஞர் பி.குமார் தனது இறுதிவாதத்தின்போது கூறியதா வது: தமிழக லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் 6.12.1996 அன்று ஜெயலலி தாவை கைது செய்தனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து ஜெயலலிதா வின் வீட்டிலும், நிறுவனங்களி லும் சோதனை நடத்தி, அசையும் மற்றும் அசையா சொத்துகளை மதிப்பீடு செய்தனர்.

இந்திய ஊழல் தடுப்பு சட்டத் தின்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்னிலையில்தான் அவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங் களில் சோதனை நடத்த வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அவ்வாறு நடைபெறவில்லை. மேலும் அவரின் கட்டிடங்களையும், வீடுகளில் உள்ள பொருட்களையும் மதிப்பிடுகை யில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் எடுத்த வீடியோவை, ஜெய லலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக திமுக ஆதரவு தொலைக்காட்சியில் சட்டத் திற்கு புறம்பாக ஒளிபரப்பினர்.

அதே போல இவ்வழக்கில் ஜெயலலிதாவிற்கு நெருக்கமான வர்களாக கூறப்படும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடன் எனது கட்சிக்காரருக்கு எவ்வித தொடர்பும் இல்லை.
லஞ்ச ஒழிப்பு சட்டம் 1 (1) (இ) மற்றும் 169-பிரிவு களின்படி உறவினர்களின் சொத்து களை சம்பந்தப்பட்டவரின் சொத் தாக கருதக் கூடாது என கூறப்பட்டி ருக்கிறது.

இங்கிலாந்து தலைமை நீதி மன்றம் 'ஒயிட் ஹவுஸ்' தொடர்பான வழக்கு ஒன்றில், வழங்கிய தீர்ப் பில் மகனுடைய சொத்து எவ்விதத் திலும் தந்தையின் சொத்தாக கருத முடியாது என உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சம்பவம் நிகழ்ந்த போது சுதாகரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்தாலும், அவருடைய சொத்துகள் எவ்விதத் திலும் ஜெயலலிதாவின் சொத்து மதிப்புடன் சேராது.

மதிப்பீட்டில் குளறுபடி

இவ்வழக்கில் ஜெயலலிதாவின் கட்டிடங்களை மதிப்பீடு செய்வதற் காக அப்போதைய திமுக அரசு ஜெயபால் என்ற இன்ஜினீயர் தலை மையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது. மதிப்பீட்டு குழுவில் இருந்த 8 பேரும் தமிழக அரசின் ஊழியர்களாக இருந்ததால், அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுள் ளனர். அவர்கள் சட்டவிதிமுறை களைப் பின்பற்றாமல் ஜெயலலி தாவின் சொத்துகளை மதிப்பிட் டுள்ளனர்.

ஜெயபால் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு, ஜெயலலிதா விற்கு சொந்தமான கட்டிடங்கள் குறித்து 3 அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கிறது.

அதில் ஜெயலலிதாவின் கட்டிடங்களின் மதிப்பு ரூ.16 கோடி எனக் கூறப்பட்டுள்ளது. 1968-ல் கட்டப்பட்ட கட்டிடங்களை எல்லாம் 1996-ம் ஆண்டு மதிப்பில் கணக்கீடு செய்து மதிப்பிட்டதன் மூலம் சொத்துமதிப்பை அதிகமாக காட்டியுள்ளனர்.

மதிப்பீட்டுக் குழுவினர் தாக்கல் செய்துள்ள 3 அறிக்கைகளிலும் 8 பேரும் வெவ்வேறு தினங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் ஜெயலலிதாவின் கட்டிடங் களை முறையாக மதிப்பீடு செய்யா மல் குளறுபடி செய்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது'' என்றார்.

மேலும் 5 நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கடந்த வாரம் ஜெ பார்ம் ஹவுஸ், ஜெ ரியல் எஸ்டேட், க்ரீன் பார்ம் ஹவுஸ், ஜெ & சசி ஹவுஸிங் டெவலப்மெண்ட், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா செவ்வாய்க்கிழமை விசாரித்தார். அப்போது, தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களுக்கு அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ்.மரடி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா, ''வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெ ரியல் எஸ்டேட், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. 

வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், விசாரணையை தாமதிக்கும் நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இது உள்நோக்கம் கொண்ட செயலாகும்” என்றார். 

கடந்த வாரம் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Monday, March 17, 2014

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: இறுதி வாதத்துக்கு நீதிபதி கெடு


தமிழக முதல்வர் ஜெயலலிதா
ரா.வினோத் தி இந்து 16மார்ச் 2014

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங், தனது இறுதிவாதத்தை மார்ச் 21-ம் தேதி கட்டாயம் தொடங்க வேண்டும் என பெங்களூர் சிறப்புநீதிமன்ற‌ நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா சனிக்கிழமை அதிரடியாக‌ உத்தரவிட்டார்.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலை யில் விசாரனைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வரவில்லை

சனிக்கிழமை அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதிவாதத்தை கட்டாயம் தொடங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்ததால், அனைவரும் இறுதிவாதம் தொடங் கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதற்கு அவர் முறையான காரணமும் சமர்ப்பிக்கவில்லை.

இதனால் கோபமடைந்த நீதிபதி டி'குன்ஹா, ``சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் முக்கிய வழக்குக்காக, ஒரு மாநிலத்தின் மூத்த வழக்கறிஞரை சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றம் நியமித்திருக்கிறது. வழக்கில் வாதிடுவதற்காக மக்களின் வரிப் பணத்தில் இருந்து பெரும் தொகையை ஊதியமாக வழங்கு கிறது. நீதிமன்றம் இறுதிவாதம் செய்யுமாறு பலமுறை பணித்தும், அரசு வழக்கறிஞர் தனது கடமையை ஆற்றாமல் தவிர்த்து வருகிறார். எனவே கடந்த முறை அவருக்கு ஒரு நாள் ஊதியத்தை அபராதமாக விதித்தேன்(ரூ.60 ஆயிரம்). அதனையும் பொருட்படுத்தாமல், அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் காரணமே சமர்ப்பிக்காமல் இருக் கிறார். இதனை கடுமையாக கண்டிக்கிறேன்''என்றார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா, அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி-யிடம், 'நீங்கள் இறுதிவாதம் செய்யுங்கள்'' என்றார். அதற்கு அவர்,'' அரசு உதவி வழக்கறிஞர் தனது மூத்த வழக்கறிஞருக்கு உதவி தான் செய்ய முடியும். மூத்த வழக்கறி
ஞரின் (பவானி சிங்) அனுமதி இல்லாமல் வாதிட முடியாது. பவானிசிங் என்னை இறுதிவாதம் செய்ய அனுமதிக்க வில்லை''என்றார்.

ஜெயலலிதா மனு தள்ளுபடி

அதனை தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா, வழக்கில் முதல் குற்ற வாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெய லலிதாவின் தரப்பு இறுதி வாதத்தை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது ஜெயலலிதாவின் தரப்பில் ஆஜரான‌ வழக்கறிஞர் மணிசங்கர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இறுதிவாதம் செய்வதற்கு நாங்கள் இன்னும் தயாராகவில்லை. அதன் தயாரிப்பு பணிகளுக்காக ஒரு மாதம் கால அவகாசம் அளிக்குமாறு கோரி இருந்தார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி டி'குன்ஹா, ``சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த சில ஆண்டுக
ளாக வழக்கறிஞராக அனுப வம் உங்கள் தரப்புக்கு (ஜெய லலிதா) இருக்கிறது. நீதிபதி பாலகிருஷ்ணா இவ்வழக்கை விசாரித்தபோது நீங்கள் இறுதி வாதம் செய்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்க முடியாது'' என்றுக்கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.

இறுதிவாதம் 21-ம் தேதி

நீதிபதி டி'குன்ஹா தொடர்ந்து பேசுகையில், 
''சொத்துகுவிப்பு வழக்கை விரைவாக முடிக்கும்படி உச்சநீதிமன்றம் எனக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதனால் வருகின்ற 21-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தவறாமல் முன்வைக்க வேண்டும். மார்ச் 25-ம் தேதி வழக்கில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் தரப்பும் தங்களுடைய இறுதிவாதத்தை முன்வைக்க வேண்டும். அன்றைய தினமே இவ்வழக்கில் மூன்றாம் தரப்பான திமுக பொதுசெயலாளர் அன்பழகனின் தரப்பு தங்களு டைய இறுதிவாதத்தை எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீண்டும் நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக் கும் விதமாக நடந்து கொண்டால் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.​