Showing posts with label கடன் தொல்லை நீங்க. Show all posts
Showing posts with label கடன் தொல்லை நீங்க. Show all posts

Thursday, February 16, 2012

கடன் தொல்லை நீங்க







கடன் தொல்லை நீங்க எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
                                                                                                  ரமேஷ் பெங்களூர்



  னியும், செவ்வாயும் எந்த ஜாதகத்தில் சேர்ந்து இருக்கிறதோ அந்த ஜாதகத்திற்கு உரியவர்கள் மாதம் மாதம் கடன் சுமையை ஏற்றிக் கொண்டே இருப்பார்களே தவிர குறைக்க மாட்டார்கள்.

  அது மட்டுமல்ல சனிக்கு 1, 2, 5, 7, 9, 11, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் சனிக்கு 1, 2, 5, 9 ஆகிய இடங்களில் கேது இருந்தாலும் கடன் தொல்லைஏற்படும்.

    இத்தகைய கடன் தொல்லையில் இருந்த விலகுவதற்குச் சுலபமான ரகசிய வழிகள் சில உள்ளன. 

 அவை இதுவரை பல காரணங்களுக்காக மறைக்கப்பட்டு வந்தாலும் பொதுநலம் கருதி வெளிப்படுத்துவது நல்லது என்று கருதுகிறேன்.

    அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் வரும் வேளையிலோ, அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் விருச்சிக லக்னம் வரும் வேளையிலோ (பொதுவாக இதை மைத்ர முகூர்த்தம் என்று சொல்வார்கள்)  யாரிடம் அதிகமாகக் கடன் பட்டிருக்கிறோமோ அவர்களுக்கு அந்த நேரத்தில் சிறிய தொகையையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும்.  

 அப்படிக் கொடுக்கும் பட்சத்தில் கடன் சிறுது சிறிதாக குறைந்து முற்றிலும் இல்லாது போய்விடும்  

இந்த லக்ன கணக்குத் தெரியாதவர்கள் நவமி திதி, வரும் செவ்வாய் கிழமையிலோ சதுர்த்தி திதி வரும் ஞாயிறு (அ) சனிக்கிழமையிலோ தினசரி காலண்டல் போட்டிருக்கும் குளிகை நேரத்தில் மேலே சொன்னது போல கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். 

 இதுவும் கணிக்கத் தெயாதவர்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் அப்படிச செய்தால் நிச்சயமாக கடன் சுமை தீரும்

யோகி ஸ்ரீ இராமானந்த குரு