Showing posts with label சென்னை உட்பட 12 மாவட்ட நீதிபதிகள் மாற்றம்!. Show all posts
Showing posts with label சென்னை உட்பட 12 மாவட்ட நீதிபதிகள் மாற்றம்!. Show all posts

Friday, August 16, 2013

சென்னை உட்பட 12 மாவட்ட நீதிபதிகள் மாற்றம்!

!6 AUG 2013
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 12 மாவட்ட நீதிபதிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "மதுரை மகளிர் நீதிபதி நீதிபதி ஆர்.தரணி, தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.வி.செந்தூர்பாண்டியன், கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.செல்வநாதன், விருதாச்சலம் 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், விருதாச்சலம் 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.கீதாஞ்சலி, சேலம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.வணங்காமுடி, சென்னை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி என்.ராஜசேகர், சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற  நீதிபதி என்.தண்டபாணி, 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற (தடா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு) நீதிபதியாகவும், 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜி.பழனியப்பன், 6வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்படுகின்றனர்.

சென்னை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற (தடா) நீதிபதி எஸ்.செங்கோட்டையன், சென்னை 7வது கூடுதல் அமர்வு நீதிமன்ற  நீதிபதியாகவும், சென்னை 7வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.கயல்விழி, சென்னை 10வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 10வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.குணசேகரன், சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை 15வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.மணிவேல், 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்படுகின்றனர்" என்று கூறியுள்ளார்.