Showing posts with label சென்னை உயர் நீதிமன்றம். Show all posts
Showing posts with label சென்னை உயர் நீதிமன்றம். Show all posts

Thursday, July 24, 2014

வழக்கறிஞர் ஆணையரை தவறாக நடத்தியவருக்கு சிறை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


தி இந்து:, ஜூலை 234 2014


வழக்கறிஞர் ஆணையரை தவறாக நடத்தியவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செந்தில் பிரபு என்பவரது காரை பறிமுதல் செய்வதற்காக வழக்கறிஞர் ஆணையர் கவிதா சுப்ரமணியம் உயர் நீதிமன்ற ஆணையுடன் சென்றுள்ளார். அப்போது, வழக்கறிஞர் கவி தாவை தரக்குறைவாகவும், சட்டவிரோதமாகவும் செந்தில் பிரபு நடத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் செந்தில் பிரபு வின் நடவடிக்கைகள் குறித்து கவிதா சுப்ரமணியம் உயர் நீதி மன்றத்தில் ஓர் அறிக்கையாக சமர்ப்பித்தார். அந்த அறிக் கையில், உயர் நீதிமன்ற ஆணையை செந்தில் பிரபு மதிக்க வில்லை. மேலும், காரை பறிமுதல் செய்ய சென்ற தன்னையும் அவர் சட்டவிரோதமாக நடத்தி னார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு பல முறை விசாரணைக்கு வந்தபோதும், செந்தில் பிரபு நேரில் ஆஜராக வில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு செவ்வாய்க்கிழமை விசார ணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்ற ஆணையை மதிக்காமலும், நீதிமன்றம் நியமித்த அதிகாரியை மதிக் காமல் தவறாக நடந்துகொண்ட செந்தில் பிரபு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், அவருக்கு ஒரு வாரம் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

Saturday, July 12, 2014

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் நியமனம்
சனி, ஜூலை 12, 2014

சென்னை ஐகோர்ட் புதிய நீதிபதியாக எஸ்.கே.கவுல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். எஸ்.கே.கவுலுக்கு 55 வயது ஆகிறது. டெல்லியைச் சேர்ந்த இவர் 1982ஆம் ஆண்டு வக்கீல் ஆனார். டெல்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பணியாற்றினார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பஞ்சாய், அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஒரு சில தினங்களில் அவர் பதவியேற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, June 15, 2014

விரைவான நீதி மிகவும் அவசியம்- உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா வலியுறுத்தல்




இந்து    ஞாயிறு, ஜூன் 15, 2014

மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக் கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா பேசியதாவது: சாட்சிகளை மிரட்டு வதும், விசாரணையை தாமதப்படுத் தும் போக்கும் வளர்ந்துள்ளன. நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடு களை தடுத்தாக வேண்டும். மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்வதும், நேர்மையான விசாரணையை உறுதி செய்வதும் மிகவும் அவசியமாக உள்ளன. அதேநேரத்தில் நேர்மையான விசாரணை எனக் கூறிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கோ, குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கோ போதிய வாய்ப்பு கிடைக்காமல் செய்து விடக் கூடாது. 

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதாட வழக்கறிஞர்கள் இல்லாத சூழலில், சட்ட உதவி மையம் மூலமாக அவர்களுக்கான வழக்கறிஞர்களை நியமித்திடவும், அவர்கள் தரப்பு கருத்துகளையும் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறிடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
நீதியை வழங்கும் நீதிபதிகள் சட்டத் தின்படி செயல்படும்போது, நீதிபதி களின் பணியானது தெய்வீகமாகக் கருதப்படுகிறது என்றார் நீதிபதி மிஸ்ரா. 

சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி பேசும்போது, வழக்குகளுக்கு விரைவாக முடிவு காண வேண்டும் என்ற உத்வேகத்துடன், நீதிபதிகள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி பணியாற்றிட வேண்டும் என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஜி.எம்.அக்பர் அலி, மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பயிற்சி அரங்கில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியின்போது, மூத்த குடிமக்களுக்காக தனியாக ஒரு சட்ட உதவி மையத்தைத் தொடங்கி வைத்த நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சிறப்பு செய்தி மடலையும் வெளியிட்டார்.

Thursday, October 24, 2013

சென்னை உயர் நீதிமன்ற கலச மாடங்களின் வண்ணத்தை புதுப்பிக்க ஏற்பாடு

கலச மாடத்தின் எழில்மிகு தோற்றம் (படம்: தீபக் சங்கர்)
கலச மாடத்தின் எழில்மிகு தோற்றம் (படம்: தீபக் சங்கர்)

 தி இந்து வி. தேவதாசன்அக்டோபர் 23, 2013

சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்தின் கலச மாடங்களுக்கு (டோம்) புதிதாக வண்ணம் பூசுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

150 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தற்போதையக் கட்டடத்தில் கடந்த 1892-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தோ சார்சனிக் கட்டட முறையிலான இதன் கட்டுமானப் பணிகள் 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. அன்றைய நாளிலேயே ரூ.12 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட கலை வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கட்டடம் சென்னை மாநகரின் புராதானச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், நீதிமன்ற கட்டடத்தின் 14 கலச மாடங்களிலும் பூசப்பட்டிருந்த வண்ணக் கலவைகள் உப்பு கலந்த கடல் காற்றின் காரணமாக தற்போது மங்கலாகி விட்டன. ஆகவே, புதிதாக வண்ணம் பூசும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. புராதனச் சின்னம் என்பதால், கட்டடத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எவ்வாறு வண்ணம் பூசுவது என்பது பற்றியும், எந்த வகை வண்ணங்களை பூசலாம் போன்றவை தொடர்பாகவும் இந்திய தொல்லியல் துறையின் வழிகாட்டுதல்களை பொதுப் பணித் துறை கோரியுள்ளது.

இன்னும் ஓரிரு நாள்களில் தொல்லியல் துறை அதிகாரிகள் உயர் நீதிமன்ற கட்டடத்தின் கலச மாடங்களைப் பார்வையிட்டு பொருத்தமான வண்ணங்களை பரிந்துரை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாரம் கட்டும் பணி

இதற்கிடையே வண்ணம் பூசும் பணிக்கான முன்னேற்பாடாக கட்டடத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள கலச மாடத்தைச் சுற்றிலும் சாரம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் பணியில் சுமார் 20 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சாரம் அமைக்கும் பணிக்காக சுமார் 2 ஆயிரம் சவுக்கு மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு முன்னர் கடந்த 1995-ம் ஆண்டு கலச மாடங்களுக்கு வண்ணம் பூசப்பட்டதாகவும், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் மீண்டும் வண்ணம் பூசும் பணி நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் பதவியேற்பு



 தி இந்துவியாழன், அக்டோபர் 24, 2013

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் பதவியேற்றுக் கொண்டார். 

ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஆளுநர் ரோசய்யா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

1953- ஆம் ஆண்டு பிறந்த ராஜேஸ்குமார் அகர்வால்,கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை (பொறுப்பு) நீதிபதியாக பதவி வகித்து வந்தார். 

இன்று அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

Wednesday, December 12, 2012

நீதிபதி வி.கே. சர்மாவுக்கு எதிராக வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு







First Published : 12 December 2012 04:26 AM IST



 டிச. 11: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே. சர்மாவுக்கு எதிராக வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எம்.வி. ரகு நந்தகோபால் உள்ளிட்ட 9 பேர் சார்பில் அவர்களது பொது அதிகாரம் பெற்ற ராஜ திலகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ரகு நந்தகோபால் மற்றும் அவரது சகோதர, சகோதரிகளுக்குச் சொந்தமான 1.33 ஏக்கர் நிலம் பெசன்ட் நகர் பார்வதி தெருவில் உள்ளது. அந்த இடத்தை சாந்தோமைச் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அங்கு தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி வருகிறது.
இந்த வழக்கில் சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.கே.சர்மா, தனியார் கட்டுமான நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எதிர் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.எம். விஜயன் ஆஜராகி வாதிட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 13-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
அதன் பின்னர் மூத்த வழக்குரைஞர் சித்ரா சம்பத் எதிர் மனுதாரர்கள் சார்பில் சில வாதங்களை நீதிமன்றத்தில் வைத்திட முயன்றார். ஆனால் ஏற்கெனவே எதிர் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் விஜயன் ஆஜராகி வாதிட்டு,  விசாரணையும் ஒத்தி வைக்கப்பட்டு விட்டதால், சித்ரா சம்பத்தை வாதிட அனுமதிக்க இயலாது என்று நீதிபதி கூறி விட்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்குரைஞர் சித்ரா சம்பத் கூறிய சில கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதால், அவர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது பற்றி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த நோட்டீஸ் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (டிச. 11) சித்ரா சம்பத் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், மூத்த வழக்குரைஞர் சித்ரா சம்பத்துக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்தும், நோட்டீûஸ திரும்பப் பெற வலியுறுத்தியும் நீதிமன்றத்தை செவ்வாய்க்கிழமையன்று வழக்குரைஞர்கள் புறக்கணித்தனர். இதற்கான அழைப்பை சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும், பெண் வழக்குரைஞர்கள் சங்கமும் விடுத்திருந்தது.
இதற்கிடையே டிசம்பர் 13-ம் தேதிக்குள் பதிலளிக்கும் வகையில் புதிய நோட்டீûஸ வழக்குரைஞர் சித்ரா சம்பத்துக்கு அனுப்புமாறு நீதிபதி வி.கே. சர்மா செவ்வாயன்று உத்தரவிட்டார்.