Showing posts with label நஷ்ட ஈடு தர உத்தரவு. Show all posts
Showing posts with label நஷ்ட ஈடு தர உத்தரவு. Show all posts

Wednesday, July 3, 2013

பயணியின், "லக்கேஜை' தொலைத்த விமான நிறுவனம் நஷ்ட ஈடு தர உத்தரவு




தினமலர் :புதுடில்லி:   ஜூலை 02,2013

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த, பயணியின், "லக்கேஜ்' காணாமல் போனதால், அவருக்கு, 75 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி, டில்லி நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டில்லியை சேர்ந்தவர், நிசார் அகமது. இவர், 2006ல், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், டில்லியிலிருந்து பாங்காக் சென்றார். பாங்காக் விமான நிலையத்தில் இறங்கிய போது, விமானத்தில் வைக்கப்பட்டிருந்த, அகமதின், லக்கேஜ் காணாமல் போனது. அதில், திருமணத்திற்கு தேவையான, விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. 

இதுபற்றி, விமான நிறுவன அதிகாரிகளிடம், அகமது புகார் செய்தார். ஆனாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அகமது, டில்லி தென்மேற்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், "அகமதின் லக்கேஜை தொலைத்த குற்றத்திற்காக, 40 ஆயிரம் ரூபாய், காணாமல் போன உடைமைகளுக்கு நஷ்ட ஈடாக, 35 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 75 ஆயிரம் ரூபாயை, நஷ்டஈடாக, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.