Friday, October 19, 2012

டெக்கான் அணி நீக்கத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது


டெக்கான் அணி நீக்கத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது





கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய டெக்கான் சார்ஜர்ஸ் கிரிக்கெட் அணியை ஐ.பி.எல். அமைப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய அணியை உருவாக்குவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்தது. 

இதையடுத்து அணியை விற்பனை செய்து கடனை அடைக்க முயன்ற டெக்கான் அணி நிர்வாகத்தின் முயற்சியும் தொடர்ந்து தோல்வியடைந்தது. பி.சி.சி.ஐ. கொடுத்த காலக்கெடுவுக்குள் ரூ.100 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தையும் அவர்களால் கொடுக்க முடியவில்லை. எனவே இவ்விவகாரத்தில், பி.சி.சி.ஐ. முடிவு செய்துகொள்ளலாம் என மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. 

இதையடுத்து டெக்கான் அணி ஐ.பி.எல். அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்த முடிவை ரத்து செய்யும்படி டெக்கான் சார்ஜர்ஸ் மும்பை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டனர். 

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று டெக்கான் சார்ஜர்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி அப்பீல் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ஆனால் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் இம்னுவை தள்ளுபடி செய்தது. இதன்மூலம், பி.சி.சி.ஐ. இனி ஏலம் மூலம் புதிய அணியை தேர்வு செய்யலா

No comments:

Post a Comment