Sunday, June 15, 2014

விரைவான நீதி மிகவும் அவசியம்- உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா வலியுறுத்தல்




இந்து    ஞாயிறு, ஜூன் 15, 2014

மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக் கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா பேசியதாவது: சாட்சிகளை மிரட்டு வதும், விசாரணையை தாமதப்படுத் தும் போக்கும் வளர்ந்துள்ளன. நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடு களை தடுத்தாக வேண்டும். மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்வதும், நேர்மையான விசாரணையை உறுதி செய்வதும் மிகவும் அவசியமாக உள்ளன. அதேநேரத்தில் நேர்மையான விசாரணை எனக் கூறிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கோ, குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கோ போதிய வாய்ப்பு கிடைக்காமல் செய்து விடக் கூடாது. 

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதாட வழக்கறிஞர்கள் இல்லாத சூழலில், சட்ட உதவி மையம் மூலமாக அவர்களுக்கான வழக்கறிஞர்களை நியமித்திடவும், அவர்கள் தரப்பு கருத்துகளையும் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறிடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
நீதியை வழங்கும் நீதிபதிகள் சட்டத் தின்படி செயல்படும்போது, நீதிபதி களின் பணியானது தெய்வீகமாகக் கருதப்படுகிறது என்றார் நீதிபதி மிஸ்ரா. 

சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி பேசும்போது, வழக்குகளுக்கு விரைவாக முடிவு காண வேண்டும் என்ற உத்வேகத்துடன், நீதிபதிகள் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி பணியாற்றிட வேண்டும் என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஜி.எம்.அக்பர் அலி, மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பயிற்சி அரங்கில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியின்போது, மூத்த குடிமக்களுக்காக தனியாக ஒரு சட்ட உதவி மையத்தைத் தொடங்கி வைத்த நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சிறப்பு செய்தி மடலையும் வெளியிட்டார்.

கடன் அட்டை தவணைக்கு ஒரு மாதம் வரை தாமதக் கட்டணம் கிடையாது: ஆர்பிஐ உத்தரவு


              தி இந்து    ஞாயிறு, ஜூன் 15, 2014

கடன் அட்டை நிலுவை செலுத்துவதில் கால தாமத கட்டணம் வசூலிப்பதில் ஒரு மாதம் வரை கால அவகாசம் அளிக்கலாம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடன் அட்டை தவணை செலுத்துவோருக்கு மிகப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

பொதுவாக கடன் அட்டை அறிக்கை (ஸ்டேட்மெண்ட்) அளிக்கும் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். கடன் தொகையில் குறைந்தபட்ச தொகை செலுத்துவதற்கான கால அவகாசமும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்விதம் குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகை செலுத்தாவிடில் வங்கிகள் தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த அளவானது ரூ. 100 முதல் ரூ. 700 வரை உள்ளது. செலுத்த வேண்டிய தொகை ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் வங்கிகள் ரூ. 700-ஐ தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன.

குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அடுத்த நாளே தவணை தொகை செலுத்தினாலும் இந்த கால தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்விதம் தவணைத் தொகை செலுத்துவதில் 30 நாள்கள் வரை அவகாசம் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதனால் குறிப்பிட்ட கெடு தேதிக்குள் தவணை செலுத்தாவிடினும், ஒரு மாதத் துக்குள் செலுத்தினால் கால தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது. இப்புதிய உத்தரவு திடீர் செலவுக்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தும் நடுத்தர பிரிவு மக்களுக்கு மிகப் பெரும் நிம்மதியை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கால தாமதக் கட்டணமானது வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. இது குறைந்த பட்சம் ரூ. 100-லிருந்து ரூ. 700 வரை உள்ளது. பொதுவாக மின்சாரம் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் தொகையை செலுத்தாவிடில் தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் கடன் அட்டை வழங்கிய வங்கிகள் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டியை வசூலிக்கின்றன. அத்துடன் குறித்த தேதியில் செலுத்தாததற்கு தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கிறது.

குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் கடன் அட்டை அளிக்கும் நிறுவனங்கள் சில சமயங்களில் குறித்த தேதியில் தவணைத் தொகை செலுத்தாவிடில் அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன. வங்கிகள் பல சமயங்களில் இது தொடர்பான அறிவிப்பை முன்னதாகவே வாடிக் கையாளருக்குத் தெரிவித்து விடுகின்றன.

ஆனால் சில தனியார் வங்கிகள் குறித்த தேதியிலிருந்து 10 தினங்களுக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்தாவிடில் அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன.

வாடிக்கையாளருக்கு 72 நாள் அவகாசம் தருவதாக கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகே அட்டையின் செயல்பாடு முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளருக்கு 75 நாள் அவகாசம் அளிக்கிறது.

ஒரே நாளில் சென்னை: ஐகோர்ட் அதிரடி



தினகரன் 15 ஜூன், 2014

சென்னை:  குண்டர் தடுப்பு சட்டத்தில்  212 பேரை சிறையில்  அடைத்ததை ரத்து செய்து உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அதிரடி   உத்தரவிட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள  நூற்றுக்கணக்கானோர் தங்களை விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட  வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

இந்த  வழக்குகளை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  சதீஷ்குமார் அக்னிஹோத்திரி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில்  இந்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சிறப்பு தனி டிவிஷன்  பெஞ்ச் உருவாக்கப்பட்டது. 

இந்த பெஞ்சில் நீதிபதிகள் தனபாலன்,  சொக்கலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். இதற்காக நேற்று  (சனிக்கிழமை) உயர் நீதிமன்றம் இயங்கியது. மொத்தம் 543 வழக்குகள்  விசாரணைக்காக பட்டியலில் இடம்பெற்றிருந்தன. 

இதில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகள், மாநில  ஆலோசனைக் கழகத்தால், உத்தரவிடப்பட்டு அரசாணை பிறப்பிக்காமல்  இருந்த வழக்குகள் என மொத்தம் 220 வழக்குகள் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டன. 

நீதிபதிகள் காலை 10.30 மணிக்கு  விசாரணையைத் தொடங்கினர். மதியம் 2 மணிக்குள் 220  வழக்குகளும் விசாரிக்கப்பட்டன. இதில் 212 வழக்குகளில் தீர்ப்பு  கூறப்பட்டது. அதன்படி இந்த 212 வழக்குகளில் உள்ள குண்டர் தடுப்புச்  சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

இதில் 55 பேர், மாநில ஆலோசனைக் கழகத்தில் குண்டர் தடுப்பு  சட்டம் ரத்து செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்படாத நிலையில்  சிறையிலிருந்து வெளியே வரமுடியாத சூழ்நிலையில் இருந்தவர்கள்.  மீதமுள்ள 157 வழக்குகள் நீண்டநாள் நிலுவையில் உள்ள வழக்குகள்.  எஞ்சிய வழக்குகள் போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தாலும்,  குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  வராததாலும் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

திருவிழாகோலம்: ஒரே நாளில் 543 வழக்குகள் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டதால் வக்கீல்களும், சம்மந்தப்பட்ட கைதியின்  உறவினர்களும் நீதிமன்றத்தில் குவிந்தனர். 

மக்கள் கூட்டம் திருவிழா  போல் இருந்தது. வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க உதவிய  அரசு வக்கீல் பி.கோவிந்தராஜனை நீதிபதிகள் பாராட்டினர்.

Friday, June 13, 2014

No Clarity Yet on Marans' Whereabouts









13th June 2014 07:57 AM


CHENNAI: As the CBI is tightening the noose around the Maran brothers, accused in the secret telephone exchange scam, the whereabouts of former Telecom Minister Dayanidhi and his elder borther and media czar Kalanidhi, remains a mystery.
It is learnt that the central agency that is probing the case has summoned them to appear before the investigation team on Monday.
EVen as strong rumours are doing the rounds that Dayanidhi and Kalanidhi, who is the owner of the multi-million Sun Group, have left for Brazil to watch the football carnival, a person close to the Dayanidhi has refuted it.
“Dayanidhi is in Chennai,” he told Express, maintaining that the rumours were wrong.
However, CBI sources said the brothers have been strictly directed to appear before them and cut short any foreign trip they are undertaking.
According to sources intelligence agencies suspect that the brothers could have flown out of the country from some other cities in the country.
The case has it that Dayanidhi, who was the Union Telecom Minister between 2004 and 2007, abused his official position to draw 323 telephone lines to his residence at Boat Club in Chennai, which was used to upload signals of the Sun TV Network owned by his brother Kalanidhi Maran.
The scam that caused several hundred crores of loss to the state-run BSNL came to light after an expose by the Express which revealed a secret report prepared by the CBI in 2007 about the illegal exchange set up at his residence.
Hansraj Saxena, former senior executive of the Sun TV Network and once the Man Friday of the Marans, had confessed to the CBI that he had knowledge about the illegal use of the BSNL lines to upload the signals of the channels of the network.
The CBI, which has collected material evidences of the scam, had summoned Dayanidhi Maran and Kalanidhi Maran to appear before it on Monday for interrogation.

Hotel Buhari Set to Give Way for Metro

Hotel Buhari opposite Central railway station in the city | R Satish Babu
Buhari opposite Central railway station in the city | R Satish Babu


 13th June 2014 07:32 AM


Buhari Hotel, a landmark for decades opposite the Central Railway Station, will vanish, paving the way for the Metro Rail.
Clearing the decks for the landmark to be razed, the Madras High Court with a “heavy he art” dismissed the petition of Buhari Sons even while admitting violation of Rule of Law in the resumption of lands.
Justice V Dhanapalan, after hearing the petition challenging the GO directing the group to vacate the land and hand over possession for Chennai Metro Rail Project, in a common order said the Court was constrained to hold that there is a violation of Rule of Law by the authorities. “With a heavy heart, by giving due respect to the ratio decidendi of the Supreme Court, we are left with no other choice but to follow the same under Article 141 of the Constitution,” the judge said. The petitioners were tenants of the building constructed by a Trust, the Rajah Sir Ramasamy Mudaliar Choultry. The bone of contention is the 1.33-acre land, given to build a choultry in 1888.
In 1958 the government allowed A M Buhari to construct the building and carry out business and a lease deed was executed on January 31, 1959 for 20 years with an option for renewal. Thereafter a GO was issued vesting the land with the Official Trustee under a scheme framed by the High Court.
The Court observed that the Government did not take any order either from the scheme court or from the Administrator General and Official Trustee (AGOT) Court. “Though there were attempts by the executive to file applications — one by Chennai Metro Rail Limited and the other by District Collector, subsequently, the same were withdrawn. So, it is clear that there was no order made by AGOT Court, the court of competent jurisdiction to permit handover  of the possession of the land in its control to the government, for resumption,” the Court observed.
The government bypassing an act under which the entrustment has been made, would amount to violation of the basic structure of the Constitution and the power of separation which has been demarcated could not be usurped by one organ on its own, it was noted.
“The facts and the position in law are that the buildings constructed on the piece of government land did not belong to government, the petitioners were in possession of the buildings and by virtue of enactments binding on the Government, the petitioners could be dispossessed, if at all, only in pursuance of a decree of a Civil Court obtained in proceedings properly initiated,” the court added.

Thursday, June 12, 2014

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாளை, ஆர்ப்பாட்டம்



12ஜூன்
2014 
00:05




சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. 

இதில், விடுமுறை இல்லாமல், 365 நாட்களும் நீதிமன்றங்கள் இயங்க வேண்டும் என்ற, தலைமை நீதிபதியின் திட்டத்தால், வக்கீல்கள் தரப்பில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விளக்கி, மனு அனுப்ப வேண்டும். 

வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கவும், விடுமுறை இன்றி நீதிமன்றங்கள் இயங்கும் திட்டத்தை எதிர்த்து நாளை, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 

இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Sunday, June 1, 2014

Bad loans a cause of concern: RBI

RBI Deputy Governor R. Gandhi releases a publication at an event organised by Assocham in New Delhi on Saturday.
RBI Deputy Governor R. Gandhi releases a publication at an event organised by Assocham in New Delhi on Saturday.

PTI:The Hindu 31 May 2014

Reserve Bank Deputy Governor R. Gandhi on Saturday expressed concern over bad loans and said banks should strengthen their internal credit appraisal systems to minimise the risk of default.
“The final (NPA) figure for March 2014 is yet to be known; while some may view this ratio as reasonable, given the economic conditions prevalent in the country and elsewhere, the total stressed assets in the banking system (including restructured standard assets) as at December 2013 was 10.13 per cent of the gross advances of the banks, which is a cause of concern for the Reserve Bank,” he said.
The gross non-performing assets (NPAs) or bad loans of the domestic banking system were 4.4 per cent of gross advances, he said at an event organised by Assocham in Delhi.
To minimise the risk of default, he said, “There is a growing need for banks to strengthen their internal credit appraisal system that is on their credit assessment and risk management mechanisms.”
At the same time, he said, banks should consider using external credit appraisals in conjunction with their own assessment.
“This would mean getting the house in order and at least on this score, banks would be on stronger ground. Banks would still be vulnerable to other factors, such as economic slowdown or policy changes or wilful defaults. But, one area of concern would be plugged,” Mr. Gandhi said.
“We can see that among the proactive steps that a bank can take to stem the problem of increasing level of NPAs and stressed assets, use of credit ratings is an important one,” he added.