Thursday, March 28, 2013

விகடன் மேடை சந்துரு பதில்கள்





  ஆனந்த விகடன்:03 Apr, 2013


க.ஏழுமலை, கோட்டூர். 

 '' 'சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்’ என்கிறேன் நான். அதாவது, அரபு நாடுகளைப் போல் 'பல்லுக்குப் பல்... கண்ணுக்குக் கண்’ என்பது மாதிரி. உங்களுடைய கருத்து என்ன? மெக்காலே அடிப்படையில் உருவான இந்திய தண்டனைச் சட்டத்தில் மாற்றப்பட வேண்டிய அம்சங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? சீர்திருத்தம் தேவையெனில், என்னென்ன செய்ய வேண்டும்? சுருக்கமாகச் சொல்லுங்கள்?''

 ''சட்டங்களைக் கடுமையாக்கினால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. ஊழல் குற்றங்களைத் தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal code) போதவில்லை என்றுதான், 1971-ல் கடுமையான ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் அரசு அலுவலகங்களில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறதா? கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள். அது உண்மையோ, இல்லையோ... ஆனால், அரசு அலுவலகங்களில் உள்ள மேஜை, நாற்காலிகள்கூட லஞ்சம் கேட்காமல் இருக்காது. நீங்கள் சொல்லும் அரபு நாடுகளில் தண்டனைகள் கடுமையாக இருந் தாலும், குற்றங்கள் குறைந்துவிடவில்லை.. 

No comments:

Post a Comment