Wednesday, June 25, 2014

ஜெ. சொத்துகளை மதிப்பீடு செய்ததில் குளறுபடி: பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் 4-வது நாளாக இறுதிவாதம்


தி இந்து:புதன், ஜூன் 25, 2014

ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பீடு செய்ததில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரும், மதிப்பீட்டுக் குழுவினரும் குளறுபடி செய் துள்ளனர் என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் 4-வது நாளாக தனது இறுதிவாதத்தை எடுத்துரைத்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத் துக்குவிப்பு வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலை யில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வின் வழக்கறிஞர் பி.குமார் தனது இறுதிவாதத்தின்போது கூறியதா வது: தமிழக லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் 6.12.1996 அன்று ஜெயலலி தாவை கைது செய்தனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து ஜெயலலிதா வின் வீட்டிலும், நிறுவனங்களி லும் சோதனை நடத்தி, அசையும் மற்றும் அசையா சொத்துகளை மதிப்பீடு செய்தனர்.

இந்திய ஊழல் தடுப்பு சட்டத் தின்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்னிலையில்தான் அவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங் களில் சோதனை நடத்த வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அவ்வாறு நடைபெறவில்லை. மேலும் அவரின் கட்டிடங்களையும், வீடுகளில் உள்ள பொருட்களையும் மதிப்பிடுகை யில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் எடுத்த வீடியோவை, ஜெய லலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக திமுக ஆதரவு தொலைக்காட்சியில் சட்டத் திற்கு புறம்பாக ஒளிபரப்பினர்.

அதே போல இவ்வழக்கில் ஜெயலலிதாவிற்கு நெருக்கமான வர்களாக கூறப்படும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடன் எனது கட்சிக்காரருக்கு எவ்வித தொடர்பும் இல்லை.
லஞ்ச ஒழிப்பு சட்டம் 1 (1) (இ) மற்றும் 169-பிரிவு களின்படி உறவினர்களின் சொத்து களை சம்பந்தப்பட்டவரின் சொத் தாக கருதக் கூடாது என கூறப்பட்டி ருக்கிறது.

இங்கிலாந்து தலைமை நீதி மன்றம் 'ஒயிட் ஹவுஸ்' தொடர்பான வழக்கு ஒன்றில், வழங்கிய தீர்ப் பில் மகனுடைய சொத்து எவ்விதத் திலும் தந்தையின் சொத்தாக கருத முடியாது என உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சம்பவம் நிகழ்ந்த போது சுதாகரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்தாலும், அவருடைய சொத்துகள் எவ்விதத் திலும் ஜெயலலிதாவின் சொத்து மதிப்புடன் சேராது.

மதிப்பீட்டில் குளறுபடி

இவ்வழக்கில் ஜெயலலிதாவின் கட்டிடங்களை மதிப்பீடு செய்வதற் காக அப்போதைய திமுக அரசு ஜெயபால் என்ற இன்ஜினீயர் தலை மையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது. மதிப்பீட்டு குழுவில் இருந்த 8 பேரும் தமிழக அரசின் ஊழியர்களாக இருந்ததால், அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுள் ளனர். அவர்கள் சட்டவிதிமுறை களைப் பின்பற்றாமல் ஜெயலலி தாவின் சொத்துகளை மதிப்பிட் டுள்ளனர்.

ஜெயபால் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு, ஜெயலலிதா விற்கு சொந்தமான கட்டிடங்கள் குறித்து 3 அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கிறது.

அதில் ஜெயலலிதாவின் கட்டிடங்களின் மதிப்பு ரூ.16 கோடி எனக் கூறப்பட்டுள்ளது. 1968-ல் கட்டப்பட்ட கட்டிடங்களை எல்லாம் 1996-ம் ஆண்டு மதிப்பில் கணக்கீடு செய்து மதிப்பிட்டதன் மூலம் சொத்துமதிப்பை அதிகமாக காட்டியுள்ளனர்.

மதிப்பீட்டுக் குழுவினர் தாக்கல் செய்துள்ள 3 அறிக்கைகளிலும் 8 பேரும் வெவ்வேறு தினங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் ஜெயலலிதாவின் கட்டிடங் களை முறையாக மதிப்பீடு செய்யா மல் குளறுபடி செய்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது'' என்றார்.

மேலும் 5 நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கடந்த வாரம் ஜெ பார்ம் ஹவுஸ், ஜெ ரியல் எஸ்டேட், க்ரீன் பார்ம் ஹவுஸ், ஜெ & சசி ஹவுஸிங் டெவலப்மெண்ட், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா செவ்வாய்க்கிழமை விசாரித்தார். அப்போது, தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களுக்கு அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ்.மரடி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா, ''வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெ ரியல் எஸ்டேட், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. 

வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், விசாரணையை தாமதிக்கும் நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இது உள்நோக்கம் கொண்ட செயலாகும்” என்றார். 

கடந்த வாரம் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

No comments:

Post a Comment