Saturday, July 5, 2014

நீதிபதிகள் நியமனக் குழு சட்டத்தை கிடப்பில் வைக்க மத்திய அரசு திட்டம்



தி இந்து      னி, ஜூலை 5, 2014


கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீதிபதிகள் நியமனக் குழு சட்டத்தை கிடப்பில் போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு தற்போது உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி களை தேர்வு செய்து நியமிக்கிறது. 

இந்த முறையை மாற்ற கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீதிபதி கள் நியமனக் குழு சட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பிரதிநிதிகள், அதிகாரி கள் அடங்கிய குழு நீதிபதிகளை நியமிக்கலாம். 

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் செய்யவும் இக்குழுவுக்கு அதிகாரம் இருக்கும்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இச்சட்ட மசோதாக்கள் குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது. குறிப்பாக, கோபால் சுப்ரமணியம் விவகாரத்தில் மத்திய அரசு மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் இச்சட்ட மசோதாக்களை கொண்டு வந்து மேலும் அதிருப்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

இச்சட்ட மசோதாக்களை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தால் நீதிமன்றத் துக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவிடும் என்பதால் இம்மசோதாக்களை கிடப்பில் போட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மசோதாக்கள் குறித்து மூத்த நீதிபதிகள், சட்ட நிபுணர்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment