Monday, March 11, 2013

தமிழகத்தில் இன்று கோர்ட் புறக்கணிப்பு






தினமலர் :மார்ச் 11,2013,00:16 IST

சென்னை:"சண்டிகார், ஜெய்ப்பூரில், வழக்கறிஞர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, இன்று கோர்ட் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளப் போவதில்லை' என, தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும், சண்டிகரிலும், வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில், வழக்கறிஞர்கள் பலர் காயமடைந்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக, ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியை, இந்திய பார் கவுன்சில் தலைவர், மன்னன்குமார் மிஸ்ரா, நிர்வாகத் தலைவர் அபூர்வகுமார் சர்மா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு, பார் கவுன்சில் தலைவர் மிஸ்ரா மற்றும் செய்தி தொடர்பாளர், எஸ்.பிரபாகரன் ஆகியோர் அனுப்பிய கடிதத்தில், "சம்பவம் குறித்து, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; காயமடைந்த வழக்கறிஞர்களுக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, ராஜஸ்தான் அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், "டில்லியில் புறக்கணிப்பு நடந்ததால், மற்ற மாநிலங்கள் முழுவதும், 11ம் தேதி (இன்று), கோர்ட் நடவடிக்கைகளில் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளக் கூடாது என, பார் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

 இதையடுத்து, "தமிழகத்திலும், கோர்ட் நடவடிக்கைகளில் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளாதிருக்க, தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment