Saturday, November 15, 2014

கிருஷ்ணய்யர் : ‘நீதித் துறையின் மனசாட்சி’,




இந்திய நீதித் துறை வரலாற்றில் ஒரு நீதிபதி பணியாற்றி ஓய்வு பெற்றபின், தான் எந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர்ந்து வழக்காடிகளுக்கு நீதி பரிபாலனம் செய்தாரோ, அதே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, ஒரு வழக்காடியாக நிறுத்தப்பட்ட அரிய வரலாற்றுச் சம்பவம் 1981-ம் ஆண்டு நவம்பர் திங்களில் கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தேறியது.

கேரள உயர் நீதிமன்ற வெள்ளி விழாவில் சிறப்பு விருந் தினராக உரையாற்றிய நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நீதித் துறையை அவமதிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் விமர்சனம் செய்து பேசினார் என வழக்கறிஞர் வின்சென்ட் பனிகுலங்கரா என்பவர் நீதிமன்ற அவமதிப்புக்கான குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலத் தலைமை வழக்குரைஞரின் அனுமதி பெற்று வழக்கு தாக்கல் செய்தார். குற்றம் சாட்டப்பட்டவர் 

ஏற்கெனவே அந்த உயர் நீதிமன்றத்தில் 1968-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர். அவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட வி.ஆர். கிருஷ்ணய்யரைத் தண்டிக்கவோ, எச்சரிக்கை செய்யவோ முன்வரவில்லை.

 மாறாக, இந்திய நீதித் துறையின் பெருமையையும் வலிமையையும் உலகம் உணரும் வகையில் தீர்ப்புகளை வழங்கியவர் ‘நீதித் துறையின் மனசாட்சி’, ‘நாட்டு மக்கள் நலன் விரும்பி’ எனப் பாராட்டு மொழிகளால் தனது தீர்ப்பில் புகழாரம் சூடி, மனுவைத் தள்ளுபடி செய்தது. ஓர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியே பின்னாளில் அந்நீதிமன்ற வழக்காடியான வரலாறு முன்னுதாரணம் இல்லாத, முன் தீர்ப்பாகச் சட்ட நூல்களில் இடம்பெற்றுள்ளது.

பல்துறை அனுபவம்

உலகின் மிகப் பெரிய நீதி பரிபாலன அமைப்பு முறையைக் கொண்டுள்ள இந்தியக் குடியரசின் உச்ச நீதிமன்றத்தை அலங்கரித்த நீதியரசர்களில் வி.ஆர். கிருஷ்ணய்யர் குறிப்பிடத்தக்கவர்.

ஏனெனில், 25 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றி, புகழ்பெற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் வாதாடி வாகை சூடிய அனுபவம், தேர்தல் களத்தில் போட்டியிட்டு மக்கள் மன்றத்தில் தலைச்சேரி தொகுதியில் வென்று, சென்னை மாகாண சட்டப் பேரவை, கேரள மாநில சட்டப் பேரவைகளில் உறுப்பினராக, மாநில சட்ட அமைச்சராக உயர்ந்த பொறுப்புகளை வகித்து சட்டமியற்றல், திட்டமிடுதல், நிதி ஒதுக்கீடு, நிர்வாகம் எனப் பல்துறை அனுபவத்தையும் பெற்றவர்.

 பின்னர், இந்தியச் சட்ட ஆணைய உறுப்பினராக இருந்ததால் சட்ட முன்வரைவுகள், அறிக்கைகள் தயாரித்தல் இவற்றில் தனிப் பெரும் பயிற்சியும் கிடைத்தது. சட்டப்புலமை, திட்ட மிடுதல், திறமையாக வாதிடுதல் இவற்றுடன் தனக்கே உரிய தலைமைப் பண்புகளுடன் வாழ்ந்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்தவர். 

இத்துடன் இளமையில் தடுப்புக் காவலில் ஒரு மாதச் சிறை வாழ்க்கையையும் அனுபவித்துள்ளார். இவ்வாறு இந்தியாவில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதியரசர்களில் மாநில அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் வி.ஆர். கிருஷ்ணய்யரைத் தவிர வேறு எவருக்கும் கிடைக்க வில்லை.

காந்தியச் சிந்தனையாளர்

காந்தியச் சிந்தனைகளைப் பயின்று உள் வாங்கிய நீதிபதியான கிருஷ்ணய்யர், குற்றவாளிகளைச் சீர்திருத்தும் நோக்கில் தண்டனைகள் அமைய வேண்டும். அதற்கேற்ற வகையில், சிறைச்சாலைகள் மனநல மருந்தகங் களாகச் செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார்.

 இந்தியாவின் மிகப் பெரிய சிறையான திகார் சிறைச் சாலைக்குள் சென்று பார்வையிட்டு, அங்குள்ள சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்கும் சிறைச் சாலை சீர்திருத்தங்களுக்கும் எடுக்க வேண்டிய நடவடிக் கைகள் பற்றிய திட்டமிடல் மேற்கொண்ட நீதிபதிகளில் கிருஷ்ணய்யர் முதன்மையானவர். 

கைதிகள் தங்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள், துன்பங்கள், கொடுமைகள் பற்றிய கடிதங்களைத் தனக்கு அனுப்பிவைத்தால், அவற்றின் தன்மை அறிந்து அதனையே வழக்குக்கான மனுவாக ஏற்று, விசாரணை மேற்கொண்டு ‘கடித வழி நீதி நல்கும் முறை’யைத் தீவிரமாக அமல்படுத்தினார்.

ஒரு நபரைக் கைது செய்யும்போது அச்சுறுத்தல், பாது காப்புக் காரணங்கள் எதுவுமில்லாத நிலையில், தேவை யின்றி இரும்புச் சங்கிலியைக் கையில் பூட்டி இழுத்துச் செல்வது மனித மாண்புகளுக்கு ஏற்றதல்ல என, கை விலங்கை உடைத்தெறியும் ஆற்றல் அவரது தீர்ப்புகளுக்கு இருந்தது.

கலைக்களஞ்சியம்

உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகாலக் குறுகிய பணிக் காலத்தில் 745 புகழ்மிக்க தீரப்புகளை வழங்கியுள்ளார். அதனை ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர், குறுகிய காலத்தில் இத்தகைய சிறப்பான, மிகுதியான தீரப்புகளை அக்காலத்திலேயே வழங்கியவர் என கிருஷ்ணய்யரைப் பாராட்டுகின்றார். 

கணிப்பொறி, இணையதளத் தொடர்புகள் இல்லாத பணிச் சுழலில், ஒவ்வொரு தீரப்பிலும் உலக அறிஞர்களின் மேற்கொள்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் ஆதாரத்துடன் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளதால், அவை படிப்பவர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியமாகத் தோன்றும்.

முதன்மையான தீர்ப்பு

இன்று நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பொதுநல வழக்காடும் முறையைச் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்து ஊக்குவித்த பெருமை கிருஷ்ணய்யருக்கு உண்டு.

 மத்தியப் பிரதேச மாநில ரத்லம் நகராட்சியின் சுகாதாரச் சீர்கேடுகளை எதிர்த்து அந்நகர மக்கள் தாக்கல் செய்த வழக்கில் கிருஷ்ணய்யர் வழங்கிய அந்தத் தீர்ப்புதான் ‘நீதி நல்குவதில் மக்கள் பங்களிப்பை’ உறுதிசெய்த முதன்மையான தீர்ப்பு என சட்ட அறிஞர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

1980-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஓய்வின்றி மக்கள் நலப்பணிகளிலேயே ஈடுபட்டு வாழ்ந்துவரும் தியாகச் செம்மலான கிருஷ்ணய்யர், தனது வாழ்நாள் முழுவதையும் மனித உரிமைகள் பாதுகாப்பு, மது-புகையிலை ஒழிப்பு, ஏழை மக்களுக்காகக் குரல் கொடுப்பது போன்ற பணிகளுக்காகத் தனது ‘சத்கமயா’ வீட்டின் கதவு களைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறார்.

இந்திய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் தனது ‘நினைவுகள் மறையுமுன்’ என்ற தன் வரலாற்றில் கூறியுள்ளதுபோல், உச்ச நீதிமன்றத்தின் சிறந்த நீதிபதி களில் ஒருவரான கிருஷ்ணய்யரின் பணிக்காலத்தை ‘கிருஷ்ணய்யர் காலம்’ என்றே அழைக்கலாம்.

- இல. சொ. சத்தியமூர்த்தி
நீதித் துறையின் சேலம் மாநகர முதுநிலை உரிமையியல் நடுவர்
தி இந்து:சனி, நவம்பர் 15, 2014

கிருஷ்ணய்யர் :நீதியின் நாயகன்!



தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜியை, மரியாதை நிமித்தம் சந்திக்க, கேரள சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தனது மனைவி, இரு மகன்களுடன் செல்கிறார். அவர்களை வரவேற்றுப் பேசிய ராஜாஜி, அவ்விரு சிறுவர்களிடம் சொல்கிறார்:

 “உங்கள் அப்பனைப் பின்பற்றாதீர்கள், அவர் விஷமத்தனமானவர், ஆனால் அவரது விஷமத்தனமெல்லாம் நல்லவற்றுக்காகவே.” 

வைத்தியநாதபுரம் ராமய்யர் கிருஷ்ணய்யர்தான் அந்த சட்டப்பேரவை உறுப்பினர்.

1952-ல் கேரளாவின் குத்துப்பரம்பு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் இரண்டு வருட காலம் முதலமைச்சர் ராஜாஜிக்கு குடைச்சல் கொடுத்த உறுப்பினர். 

அதன் வெளிப்பாடுதான் அவரைச் சந்தித்த மகன்களுக்கு கிடைத்த ஆலோசனையை மேலே பார்த்தோம். 

மாவட்ட மருத்துவ அதிகாரி ஒருவர் மீதுள்ள ஊழல் புகார்பற்றி பொது விசாரணை கோரி சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

முதலமைச்சர் ராஜாஜி தானும் ஒரு வழக்கறிஞர், அந்தப் புகாரைப் பரிசீலித்ததில் முதல் நோக்கில் குற்றமேதும் தென்படவில்லை என்று கூறவும் உடனடியாக கிருஷ்ணய்யர், தானும் மாவட்ட நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் நடத்தியதில் திறமை பெற்றவர் என்றும், மருத்துவ அதிகாரியின் மீதுள்ள குற்றம் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்திப் பேசவே, முதலமைச்சர் தனது கருத்தை மாற்றிக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட நேர்ந்தது.

மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பின்னர் நடந்த கேரளத் தேர்தலில், சுயேச்சையாக வெற்றிபெற்ற கிருஷ்ணய்யர், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் உள்துறை அமைச்சரானார். 

1958-ம் வருடம் ஒரு நாள் அவர் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருக்கும்போது தொலைபேசிச் செய்தி வருகிறது. அருகிலிருந்த காவல் நிலையத்தில் இளைஞன் ஒருவன் சித்திரவதைக்கு உள் ளாக்கப்படுவதாகத் தகவல். உடனடியாக காரைத் தானே ஓட்டிக்கொண்டு காவல்நிலையத்துக்குச் செல்கிறார். கேள்விப்பட்டபடியே இளைஞன் ஒருவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, அவனை விடுவிக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். 

தினமும் இரவில் திருவனந்தபுரம் மாவட்டக் கண்காணிப்பாளருடன் வீதிகளில் பயணம் செய்து காவலர்கள் தங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்கிறார்களா என்பதைச் சோதித்த உள்துறை அமைச்சரை இந்நாடு இதுவரை கண்டதில்லை.

சிறைக் கைதிக்கு மனிதாபிமானம்

தேர்தல் வெற்றிக்கு முன்னரே தடுப்புக் காவல்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணய்யர், தனது 30 நாட்கள் சிறைவாசத்தில் சிறைக் கைதிகளின் நிலைமையை உணர்ந்ததுடன், இந்தியச் சிறைகள் கற் காலத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டார்.

 பின்னர், உச்ச நீதிமன்ற நீதிபதியானபோது, சிறைக் கைதி ஒருவர் அஞ்சல் அட்டையில் அனுப்பிய புகாரை வழக்காக எடுத்துக்கொண்டு, சிறைக் கைதிகளை மனிதாபிமானத் துடன் நடத்துவதற்கு உத்தரவிட்டதுடன், சுனில் பாத்ரா-2 என்ற வழக்கில் பரவலான சிறை சீர்திருத்தங்களுக்கு உத்தர விட்டதோடு மட்டுமின்றி, எதிர்காலத்தில் புகார்களை நீதிமன்றங்கள் தாமாகவே எடுத்துக்கொண்ட வழக்காகக் கருதி, அவ்வழக்குகளில் நிவாரணம் வழங்க உத்தர விட்டார். 

மேலும், மாவட்ட நீதிபதிகள் தொடர்ந்து சிறைச் சாலைகளுக்குச் சென்று, கைதிகளிடமிருந்து புகார்களைப் பெற்று நிவாரணம் வழங்கவும் அத்தீர்ப்பு உறுதிசெய்தது.

சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்குப் பலரும் திட்டங்கள் வைத்திருந்தனர். எம்.ஜி.ஆர். ஆண்ட காலம். மெரினா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் கட்டுமரங்கள் அதன் அழகைக் குறைக்கின்றன என்று யாரோ ஒருவருக்குத் தோன்றியது.

 திடீரென்று கட்டுமரங்கள் ஒரு நாள் காணாமல் போயின. எதிர்த்து நின்ற மீனவர்கள் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சிலர் இறந்தனர். அதற்குப் பின்னும் காவல் துறையினரின் அத்துமீறிய தாக்குதலுக்குப் பயந்து பல மீனவர்கள் குப்பங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.

 ராணிமேரி கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள நடுக்குப்பம் 4.12.1985-ல் காவலர்களால் சூறையாடப்பட்டது. தனிமையில் விடப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயசாளிகள் யாரும் தாக்குதலுக்குத் தப்பவில்லை. 

உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஓய்வறியா அந்த உத்தமர் கிருஷ்ணய்யருக்கு இருப்புக்கொள்ளவில்லை. 

செய்தி கேட்டு நடுக்குப்பத்தின் சேறு சகதிகள் பாராமல் நேரில் சென்று அம்மக்களின் குறை கேட்டு, அறிக்கை ஒன்றைத் தயார் செய்தார். 

முதலமைச்சர் எம்.ஜி்.ஆருக்கு அந்த அறிக்கையுடன் அவர் எழுதிய கடிதத்தில், “மீனவர்கள் இம்மண்ணின் மூத்த குடிகள், அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை” என்று குறிப்பிட்டதுடன், அம்மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தார்.

மனித உரிமைக்கான வழக்கறிஞர், சட்டமன்ற உறுப் பினர், உள்துறை அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய சட்ட கமிஷன் உறுப்பினர், உச்ச நீதிமன்ற நீதிபதி என்று பன்முக ஆளுமை கொண்ட கிருஷ்ணய்யருக்கு அடிநாத மாக விளங்கியது விளிம்பு நிலை மனிதர்களின் விடுதலை தான். எண்ணம், எழுத்து, செயல் இவை அனைத்திலும் இருந்த சிந்தனைப்போக்குகளை அவர் கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தனது சிறப் பான தீர்ப்புகளிலும் அதைப் பதிவுசெய்ய மறந்ததில்லை. 

அதிகாரம் கிடைக்கும்போதெல்லாம் அதை நலிவுற்ற மக்களுக் குப் பயன்படுத்தத் தயங்கியதும் இல்லை. அதே நேரத்தில், அதிகார மமதையில் சர்வாதிகாரப் பாதையில் சென்ற அரசியல்வாதிகளுக்குப் பாடம்புகட்டவும் மறந்ததில்லை.

இலவச சட்ட உதவி

மத்திய சட்டக் கமிஷன் உறுப்பினராக இருந்தபோது, அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்கும்வண்ணம் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, பிரிவு 39-A அறிமுகப்படுத்தப்பட்டது. நீதிமன்றங்கள் அனைவருக்கும் பொது என்றாலும், வசதியும் வாய்ப்பும்மிக்க வக்கீல்களின் உதவியைப் பெற முடியாத நலிவுற்ற மக்களும் நீதிமன்றத்தை நாடும் வகையில் இப்பிரிவு கொண்டுவரப்பட்டதற்கான முழுப் பெருமையும் அவரையே சாரும்.


1975-ம் வருடம் அலகாபாத் உயர் நீதிமன்றம், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்ற ரேபரேலி தொகுதியில் தேர்தல் முறைகேடாக நடத்தப்பட்டது என்று கூறி அவரது தேர்தல் வெற்றி ரத்து செய்யப்பட்டது. 

அதை எதிர்த்துப் போடப்பட்ட மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வருகிறது. அப்போது விடுமுறைக் கால நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் கிருஷ்ணய்யர். வழக்கு விசாரணைக்கு வருமுன்னே அவரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள அன்றைய சட்ட அமைச்சர் கோகலே முயற்சிக்கிறார். 

அவரைச் சந்திக்க மறுத்த கிருஷ்ணய்யர், வழக்கை விசாரித்த பின், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முழுத் தடை வழங்க மறுக்கிறார். ஆட்டம் கண்ட பிரதமர், நாடு முழுதும் நெருக்கடி நிலைமையைப் பிரகடனப்படுத்தி, எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரையும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்துகிறார். கிருஷ்ணய்யர் முழுத் தடை அளிக்க மறுத்ததன் காரணந்தான் நெருக்கடி நிலைமை ஏற்பட்டதென்று பலரும் கூறுவர். 

அவர் அளித்த உத்தரவை அவரது கருத்துக்களுடன் முழுதும் ஒத்துப்போகாத பிரபல சட்ட நிபுணர் எச்.எம். சீர்வை, கிருஷ்ணய்யர் முழுத் தடை விதிக்க மறுத்த தேதியன்றுதான் உச்ச நீதிமன்றம் அதனுடைய சிறப்பான நேரத்தைப் பெற்றது என்று தனது புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

கிருஷ்ணய்யரின் தீரம்

நெருக்கடி நிலையின்போது, இந்திரா காந்தியிடம் அவரது அதிகார மமதையைச் சுட்டிக்காட்டப் பயந்த நேரத்தில், கிருஷ்ணய்யர் பிரதமரிடம் அவரது அரசு நீதிமன்றத்தில் மக்களது அடிப்படை உரிமையைப் பறித்தது நியாயம் என்று வாதாடியது தவறென்று சுட்டிக்காட்டினார்.

 அந்நேரத்தில், எவருமே இந்திரா காந்தியிடம் விமர்சனங்களை முன்வைக்க வராதபோது, கிருஷ்ணய்யர் நேரடியாகப் பிரதமரிடம் அவர் இழைத்த தவறை சுட்டிக்காட்டிய செயல் அவரது தீரத்தை வெளிப்படுத்தும்.
இன்றைக்குப் பலரும் தமிழரின் உடைக் கலாச்சாரம் வேட்டிதான் என்று பேசுவார்கள். சமீபத்தில், நீதிபதி ஒருரை அனுமதிக்க மறுத்த சென்னை கிரிக்கெட் கிளப் விவகாரத்தை ஒட்டி எழுந்த ஆவேசத்துக்குப் பிறகு, தமிழக சட்டமன்றமும் வேட்டி கட்டி வருபவருக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சிறைத் தண்டனை என்ற சட்டம்கூட இயற்றியுள்ளது.

 நீதிபதி கிருஷ்ணய்யரைப் பொறுத்தவரை அவர் ஓய்வுபெற்ற பிறகு, என்றுமே அவர் பாரம்பரிய உடையையே அணிந்துவந்தார். 

கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினராயிருந்த கிருஷ்ணய்யரின் நண்பர் ஒருவர், அவரை அங்கு இரவு உணவுக்கு அழைத்துச் சென்றார். 

கதர் சட்டையும் கதர் வேட்டியும் கட்டி ரப்பர் செருப்பு அணிந்து வந்த அவரை அங்கிருந்த வாயிற்காவலர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். கிளப் விதிகளின்படி மேல்நாட்டு உடைகளையே அணிந்து வர வேண்டும் என்பதால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிரச்சினையைப் பெரிதுபண்ண விரும்பாத கிருஷ்ணய்யர், அங்கிருந்த விருந்தினர் பதிவேட்டில் இவ்வாறு எழுதிக் கையெழுத்திட்ட பின் வெளியேறினார்:-

“எனக்கு இரவு உணவு இங்கு மறுக்கப்பட்டது. ஆனாலும், கௌரவமான இந்தியனாக இங்கிருந்து நான் வெளியேறுகிறேன்.”

1957-ம் வருடம் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, முதல்முறையாக இந்தியாவில் (ஏன் உலகத்திலேயே) தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத்தது. பள்ளிக் கல்வியைச் சீரமைக்கவும், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட்டது.

அது பொறுக்காத சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், சாதி அமைப்புகளும் கம்யூனிஸ்டுகள் கையிலிருந்து கேரளாவை விடுவிக்க விடுதலைப் போராட்டம் (விமோசன சமரம்) ஆரம்பித்தனர். சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதென்று அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி 1959-ல் அமலுக்கு வந்தது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதலில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி முதல் ஜனநாயகப் படுகொலைக்குப் பலியானது.

அந்த முடிவைத் தவிர்ப்பதற்கு நல்லெண்ண முறையில் அன்றைய பிரதமர் பண்டித நேருவை கிருஷ்ணய்யர் சந்தித்து முயற்சி செய்தார். ஆனால், தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்றால் காங்கிரஸைக் கரைத்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்சிக் கலைப்பு முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதால் கிருஷ்ணய்யரின் முயற்சி தோல்வியுற்றது.


உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் ஆற்றிய பணியைப் பற்றி பலரும் எழுதியுள்ளனர். சட்ட நிபுணர்கள் ஒருமித்த குரலில் அவரது பணியைப் பாராட்டியுள்ளனர். இவை எல்லாவற்றையும்விட, கிருஷ்ணய்யரைப் பற்றியும் அவரது தீர்ப்புகளைப் பற்றியும் பல நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்களும் நீதிபதிகளும் பாராட்டியுள்ளனர். 

ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்ற நீதிபதி மைக்கேல் கிர்பி, கிருஷ்ணய்யரின் 80-வது பிறந்ததினத்துக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்து இன்றைக்கு அவர் நூற்றாண்டு காணும் சூழலிலும், என்றைக்கும் பொருத்தமானது.
“கிருஷ்ணய்யர் பொதுச்சட்டத்தில் பேராற்றல் பெற்றவர். 

அவர் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானவரல்ல. உலகம் முழுதும் உள்ள வக்கீல்கள் மற்றும் சட்ட நிபுணர்களுக்குச் சொந்தமானவர்.

 அவருடைய தீர்ப்புகள் ஆஸ்திரேலிய நீதிமன்றங்களில் மேற்கோள் காட்டப்படுவதுடன் நீதிபதிகள் அவற்றைப் பின்பற்றவும் முற்படுவர்!”
கே. சந்துரு:  முன்னாள் நீதிபதி, உயர் நீதிமன்றம், சென்னை.

தி இந்து:சனி, நவம்பர் 15, 2014

Monday, November 10, 2014

what constitutes as non-performing assets ? Supreme Court to decide ...



Monday, 10 November 2014 - 6:22am IST | Place: Mumbai | Agency: DNA

Several promoters of distressed companies have dragged the ReserveBank of India to the Supreme Court alleging that its prudential norms defy the right to equality under Article 14 of the Constitution of India. The case comes up for hearing on this Wednesday where it's just not the definition of non-performing assets (NPA) as defined by the Securitisation Act of the parliament but also that as defined by RBI that have been challenged as `unconstitutional'. Both the definitions have been found contrary and contradictory to each other, say legal experts.
In the meantime, the apex court had granted status quo to the companies and promoters, about 55, from Gujarat and Tamil Nadu, till the case comes up for hearing on November 12. Some of the petitioners include Deccan Chronicles Holdings, Goldstar Jewellers, Seema Jewellers, Natraj Ships Agency and Shelter Pharma. The case dates back to the Gujarat High Court's April judgment in a common civil petition filed before it. The high court had struck down the powers of different regulators defining NPAs (under section 2(1)(o)(a) of the Securitisation Act, 2002). indicating that RBI's NPA classification be adhered to. The judgment now mandates RBI to enact guidelines for all such institutions, but as of now the RBI cannot issue any guidelines as the case will continue in the Supreme Court, legal experts said.
Banks and financial institutions which are governed by its own Act but not under the RBI as regulator can define their own timeframe to classify an asset as an NPA. The days range between RBI's prescribed 90 days and 180 days. A few such institutions are EXIM Bank, under Section 39 of the EXIM Act, National Housing Bank under NHB Act, and so is the case with Power Finance Corporation, Nabard, Rural Electrification Corporation and Indian Railway Finance Corporation.
Interestingly, Power Finance Corporation (PFC), which was notified as a public financial institution in 1990 under the Companies Act 1956, has a six-month period to classify an asset as an NPA. It subsequently registered itself in 2010 as a non-banking finance company (NBFC) with the RBI and has classified itself as an infrastructure finance company.
Advocates Vishwas Shah and Masoom Shah had argued in the high court, that the Securitisation Act and Reconstruction of Financial Assets & Enforcement of Security Interest Act, (Sarfaesi Act) 2002 should be applied uniformly across all borrowers and challenged the RBI guidelines on income recognition, provisioning and asset classification under prudential norms as being unconstitutional. The high court quoting an earlier Supreme Court judgment of Mardia Chemicals said the RBI guidelines were taken note of by the apex court and had upheld the provisional norms of RBI as intra-vires, meaning within its legal power.
"There is no justification of declaring the guidelines by the RBI to be invalid because different period of default has been indicated for declaring an asset as NPA of banks on one hand and NBFCs on the other." The order further stated: "The high court in writ jurisdiction should not interfere with such guidelines unless those are found to be contrary to any statutory provisions or the Constitution." The petition had questioned the constitutional validity under the right to equality as per Article 14 of the Constitution of India and that NPA classification of RBI were not as defined by the Sarfaesi Act which does not specify the any period to declare an asset an NPA.
"The regulators, by virtue of the amendment of Section 2(1) (o) of the Securitisation Act, can, at any point of time, take a liberal approach thereby inducing the citizen to take loan from them by fixing a relatively longer period as NPA and at the same time, without any valid reason, for the benefit of only the financial interest of those financial institutions, can also take a stringent policy fixing a relatively shorter period of time for declaring the existing secured assets as NPA," the high court had said.
The advocates who partially succeeded in the common civil petition filed before theGujarat High Court had made two-fold submissions before the court. The first was Section 2 (1) (o) of the Securitisation Act was ultra-vires (illegal) the Constitution of India, violating Article 14 and the principal of the original act. The principal grievance of advocate Shah is that paragraph 2.1 of the RBI Guidelines is discriminatory, arbitrary, unreasonable and ultra vires the Securitisation Act and that the definition of the NPA as per RBI is contrary, distinct and contradictory to the definition of the NPA under the Central Act, and hence the same is unconstitutional.

Safeguard professional ethics: Justice Banumathi

Justice R. Banumathi, a judge of the Supreme Court, on Saturday said cases of violations of code of conduct should be dealt with stringently and it was the responsibility of the bar council to safeguard professional ethics and reinforce the people’s
Justice R. Banumathi, a judge of the Supreme Court, on Saturday
 said cases of violations of code of conduct should be dealt with
 stringently and it was the responsibility of the bar council to 
safeguard professional ethics and reinforce the people’s
 faith in the profession

DC CORRESPONDENT | November 09, 2014, 05.11 am IST

Chennai: Justice R. Banumathi, a judge of the Supreme Court, on Saturday said cases of violations of code of conduct should be dealt with stringently and it was the responsibility of the bar council to safeguard professional ethics and reinforce the people’s faith in the profession. After inaugurating the disciplinary committee halls in the new Bar Council of Tamil Nadu and Puducherry (BCTP) building, Justice Banumathi said the function of the state bar council was to maintain a roll of advocates and to lay down standards and procedures to be followed.
 
In the profession of law, the advocates had a dual responsibility: to uphold the interest of their clients and to efficiently conduct themselves as officers of the court. It becomes indispensable for advocates to adhere to the highest standards of probity and honour. The law profession was a noble calling and ethics ought to play an instrumental role in it, she added.
 
She said the Advocates Act vested the power of enquiry into cases of misconduct against advocates in the disciplinary committees of the bar council. The decision of the committees must be to enforce at least a minimal level of integrity in the profession. In cases of minor aberrations, a liberal view may be adopted and recourse taken to warnings and censures.
 
Earlier, Justice C. Nagappan, a judge of the Supreme Court, who inaugurated the auditorium in the new BCTP building, said with members of the bar moving away from the true spirit of the profession and regarding it more a business, some aberrations had resulted. This attitude had to be corrected.
 
New entrants to the profession had their own economic compulsions which was contributing to the change in attitude, he said. But the basic needs of a meritorious entrant ought to be provided for to encourage him to withstand the rigours of life at the threshold of his career.

Bar council must enlarge scope of legal education: SC judge

Madras high court Chief Justice Sanjay Kishan Kaul inaugurates administrative block in Bar Council of Tamil Nadu and Puducherry building on Saturday (Photo: DC)
Madras high court Chief Justice Sanjay Kishan Kaul inaugurates 
administrative block in Bar Council of Tamil Nadu and Puducherry
 building on Saturday (Photo: DC)

DC CORRESPONDENT | November 09, 2014, 06.11 am IST

Chennai: Supreme Court judge Justice F.M. Ibrahim Kalifullah on Saturday asked the Bar Council of Tamil Nadu and Puducherry (BCTP), regulating legal education in the state, to enlarge its scope at the global level.Inaugurating the new BCTP building on N.S.C. Bose Road, Justice Kalifullah said the bar council has to focus on four mandates: legal education, enrolment of advocates, supervision of professionals and protection of lawyers.
 
The bar council would have to maintain the standard of legal education which had grown phenomenally in the global context, he pointed out. “The time has come for it to see that legal education’s standards rise to the highest level,” he added.He said it should adopt the 184th Law Commission report, which suggested how legal education could be improved. “Today, strategies are not restricted to the domestic level, but include the international.
 
We have intellectual property rights issues, arbitration and commercial litigations. Foreign investments are being poured in. We have some very good law institutions. Why not every institution impart legal education to match that standard and produce law graduates who can maintain standards when they join the profession? If private institutions can maintain standards, why can’t the bar council do the same with the standard of education. Once the bar council sets the standard, automatically all fake institutions and lawyers will get eliminated,” Justice Kalifullah said.

Earlier, Justice Sanjay Kishan Kaul, Chief Justice of the Madras high court, said legal education had to be improved in India. “We have a paucity of good professors. Eminent lawyers should supplement their role. There should be periodic checks by the bar council to verify the standard of law institutions functioning in the whole state. Faculty should be verified.
 
Continuing legal education should be provided and senior lawyers should impart it. The younger generation is the ‘aspiration generation’. The bar council must pick up ideas and issues and teach these to young lawyers. Legal education should be given at the initial level and, thereafter, continuous legal education should be given. The bar council can then achieve its objective,” he said.


Wednesday, November 5, 2014

Corporate Debt Restructuring :Restructured loans of banks may zoom by ₹1 lakh cr in next 5 months

B L :MUMBAI, NOV 4:2014
Debt of top 500 corporates totals ₹28 lakh cr; 1 in 5 firms distressed: India Ratings report
The Indian banking system could see restructured loans surging by ₹1 lakh crore in the remaining five months of this financial year even as it may take a ‘big bath’ to address asset quality problems and start the next fiscal year on a clean slate, said credit rating agency India Ratings (Ind-Ra).
Painting this grim scenario, the agency said loan accounts whose performance may deteriorate could be addressed (restructured) at one go.
Restructuring of assets entails creditors (among others) extending concessions to borrowers by reducing interest rates, rescheduling repayments and converting debt into equity, and promoters infusing equity into their venture.
Ind-Ra based its estimates of restructured assets on an analysis of the credit metrics of the top 500 corporate borrowers, who accounted for the largest debt in the financial year that ended in March 2014.
The aggregate debt of these 500 corporates is ₹28,76,000 crore, which is 73 per cent of the total bank lending to the industry, services and export sectors.
Financially distressed

Around 82 of these 500 top borrowers have already been formally tagged as financially distressed (as a non-performing asset, corporate debt restructuring case or restructured asset).
Another 83 (17 per cent) of these 500 borrowers, accounting for 9 per cent of the overall debt of the group, have severely stretched credit metrics, said Ind-Ra. The credit rating agency observed that within these 83 corporates, operating profitability barely covers the interest required to be serviced in most cases. These corporates have limited expectation of an immediate improvement in profitability.
However, thus far, these borrowers with severely weak credit metrics have not been publicly tagged as financially distressed. But one out of every four could be tagged as stressed by the end of March 2015.
Incremental restructuring

Ind-Ra assessed that potentially one-third to half of the 83 accounts could be in the category of SMA 2 (special mention accounts), with delays in debt servicing ranging between 61 and 90 days.
Loan accounts, which may be tagged as SMA 2 during the October-December 2014 period, would be either normalised or put up for restructuring. This decision is to be arrived by the lenders by March 31 next year, it added.
If some of the corporates are unable to generate significant cash flow or infuse significant equity in the near term, they may be identified by their lenders for restructuring pursuant to RBI guidelines.
Some borrowers may even deteriorate further, to be tagged as NPAs. The cumulative impact may be an incremental ₹60,000 crore to ₹1 lakh crore of restructured assets in the banking system in the next five months, the report said.
A senior public sector bank official said given the tough situation in the economy, whereby infrastructure projects are stalled because of external factors and de-allocation of coal blocks will impact metal, power and cement companies, the central bank needs to come up with a special dispensation for asset classification.
“If the RBI sticks to its deadline of April 1, 2015, for complete withdrawal of regulatory forbearance, then banks will get impacted as not only will an asset be downgraded once it is restructured, they will also have to make higher provisions. This will shake investor confidence in banks,” he said.
VS Seshagiri Rao, Joint MD and CFO, JSW Steel, said banks have to take a practical call and come out with a special sector-specific dispensation on stressed assets.
Each sector, such as infrastructure, power, steel and textiles, is affected by different problems, largely due to factors beyond the purview of company promoters.
For instance, delays in project clearance and high pricing of raw material in domestic markets, especially coal, is eroding profitability of Indian companies.