இரா.வினோத் தி இந்து 16மார்ச் 2014
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங், தனது இறுதிவாதத்தை மார்ச் 21-ம் தேதி கட்டாயம் தொடங்க வேண்டும் என பெங்களூர் சிறப்புநீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா சனிக்கிழமை அதிரடியாக உத்தரவிட்டார்.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலை யில் விசாரனைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வரவில்லை
சனிக்கிழமை அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதிவாதத்தை கட்டாயம் தொடங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்ததால், அனைவரும் இறுதிவாதம் தொடங் கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதற்கு அவர் முறையான காரணமும் சமர்ப்பிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த நீதிபதி டி'குன்ஹா, ``சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் முக்கிய வழக்குக்காக, ஒரு மாநிலத்தின் மூத்த வழக்கறிஞரை சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றம் நியமித்திருக்கிறது. வழக்கில் வாதிடுவதற்காக மக்களின் வரிப் பணத்தில் இருந்து பெரும் தொகையை ஊதியமாக வழங்கு கிறது. நீதிமன்றம் இறுதிவாதம் செய்யுமாறு பலமுறை பணித்தும், அரசு வழக்கறிஞர் தனது கடமையை ஆற்றாமல் தவிர்த்து வருகிறார். எனவே கடந்த முறை அவருக்கு ஒரு நாள் ஊதியத்தை அபராதமாக விதித்தேன்(ரூ.60 ஆயிரம்). அதனையும் பொருட்படுத்தாமல், அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் காரணமே சமர்ப்பிக்காமல் இருக் கிறார். இதனை கடுமையாக கண்டிக்கிறேன்''என்றார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா, அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி-யிடம், 'நீங்கள் இறுதிவாதம் செய்யுங்கள்'' என்றார். அதற்கு அவர்,'' அரசு உதவி வழக்கறிஞர் தனது மூத்த வழக்கறிஞருக்கு உதவி தான் செய்ய முடியும். மூத்த வழக்கறி
ஞரின் (பவானி சிங்) அனுமதி இல்லாமல் வாதிட முடியாது. பவானிசிங் என்னை இறுதிவாதம் செய்ய அனுமதிக்க வில்லை''என்றார்.
ஜெயலலிதா மனு தள்ளுபடி
அதனை தொடர்ந்து நீதிபதி டி'குன்ஹா, வழக்கில் முதல் குற்ற வாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெய லலிதாவின் தரப்பு இறுதி வாதத்தை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது ஜெயலலிதாவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிசங்கர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இறுதிவாதம் செய்வதற்கு நாங்கள் இன்னும் தயாராகவில்லை. அதன் தயாரிப்பு பணிகளுக்காக ஒரு மாதம் கால அவகாசம் அளிக்குமாறு கோரி இருந்தார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதி டி'குன்ஹா, ``சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த சில ஆண்டுக
ளாக வழக்கறிஞராக அனுப வம் உங்கள் தரப்புக்கு (ஜெய லலிதா) இருக்கிறது. நீதிபதி பாலகிருஷ்ணா இவ்வழக்கை விசாரித்தபோது நீங்கள் இறுதி வாதம் செய்துள்ளீர்கள். எனவே உங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்க முடியாது'' என்றுக்கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
இறுதிவாதம் 21-ம் தேதி
நீதிபதி டி'குன்ஹா தொடர்ந்து பேசுகையில்,
''சொத்துகுவிப்பு வழக்கை விரைவாக முடிக்கும்படி உச்சநீதிமன்றம் எனக்கு அறிவுறுத்தி இருக்கிறது. அதனால் வருகின்ற 21-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தவறாமல் முன்வைக்க வேண்டும். மார்ச் 25-ம் தேதி வழக்கில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் தரப்பும் தங்களுடைய இறுதிவாதத்தை முன்வைக்க வேண்டும். அன்றைய தினமே இவ்வழக்கில் மூன்றாம் தரப்பான திமுக பொதுசெயலாளர் அன்பழகனின் தரப்பு தங்களு டைய இறுதிவாதத்தை எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீண்டும் நீதி மன்றத்தின் நேரத்தை வீணடிக் கும் விதமாக நடந்து கொண்டால் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.
No comments:
Post a Comment