சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,
’’சென்னை 14-வது கூடுதல் மாவட்ட (சி.பி.ஐ) கோர்ட்டு நீதிபதி கே.வெங்கடேஷ்சுவாமி, 13-வது கூடுதல் மாவட்ட (சி.பி.ஐ) கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சார்பு நீதிபதி வி.சோபனாதேவி மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். எஸ்.மோகனகுமாரி, காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதியாகவும், வி.சோபனாதேவி சென்னை 14-வது கூடுதல் சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாக வி.சாருஹாசினி, சென்னை 2-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாக ஆர்.கலைமதி, 3-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாக எஸ்.கோமதிஜெயம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’’என்று கூறப்பட்டுள்ளது.