Showing posts with label Lawyers Boycott. Show all posts
Showing posts with label Lawyers Boycott. Show all posts

Sunday, March 10, 2013

BCI's Notification in regard to abstain from the work on Monday i.e. 11.03.2013

Saturday, March 9, 2013

11-ல் நீதிமன்றப் புறக்கணிப்பு


ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் வழக்குரைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து மார்ச் 11ஆம் தேதி (திங்கள்கிழமை) நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் மற்றும் சண்டீகர் நகரங்களில் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றன. இந்த தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், பெண் வழக்குரைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், இந்த சம்பவங்களைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள வழக்குரைஞர்கள் அகில இந்திய அளவில் வரும் திங்கள்கிழமை (மார்ச் 11) நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் திங்கள்கிழமை வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அகில இந்திய பார் கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி. செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

Friday, March 8, 2013

சென்னையில் இன்று வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்






First Published : 08 March 2013 03:52 AM IST
ராஜஸ்தானில் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இளம் வழக்குரைஞர்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை நோக்கி அம்மாநில வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஊர்வலம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து வழக்குரைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் நடத்திய இந்தத் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், பெண் வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன.



Sunday, March 3, 2013

Lawyers to boycott court proceedings In Tamilnadu And Pondicherry on 4th March 2013




The Hindu :SALEM, March 2, 2013


Demanding that India should strongly support the U.S.-backed resolution against Sri Lanka in the UNHRC in Geneva and President Mahinda Rajapaksa be tried for war crimes, over 60,000 lawyers from all the 250 bar associations in Tamil Nadu and Pondicherry would boycott proceedings on March 4, P. Paramasivam, Chairman, Federation of Bar Associations of Tamil Nadu and Pondicherry said here on Friday.

Addressing presspersons, Mr. Paramasivam said that over one lakh Tamil people, including women, children were brutally killed by the Lankan government during the end of 2009 war.

Mr. Paramasivam wanted a voting to be carried out for establishing a separate Tamil Eelam so that the rights of Tamil people were protected.