Tuesday, July 1, 2014

வங்கி கடனை செலுத்தாதோர் மீது கிரிமினல் வழக்கு: நிதியமைச்சகம் அதிரடி


தினமலர் ஜூன் 30,2014,02:18

சொத்து இருந்தும், வங்கி கடனை திரும்ப தராமல், திட்டமிட்டு ஏமாற்றுவோர் மீது கிரிமினல் வழக்கு தொடுப்பது குறித்து,மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன், சென்ற மார்ச் நிலவரப்படி, 2,50,715 கோடி ரூபாயாக உயர்ந்துஉள்ளது.

தீவிரம்:இதனால், அதிக அளவில் கடன் கொடுத்த பொதுத் துறை வங்கிகளின் சொத்து மதிப்பு பாதிக்கக் கூடும் என்பதால், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் கடன் மீட்புக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்திஉள்ளன.

இதன்படி, வசதி இருந்தும், வங்கிக் கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளோரை கண்டறிய, மூன்று வங்கிகள் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி அமைக்க உள்ளது.இக்குழு, கடன்தாரரின் சொத்து பின்னணி விவரங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில்,கடனாளியை, 'வசதி இருந்தும் கடனை திரும்ப செலுத்தாதோர்' பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கும். 

இந்த பட்டியலில் இடம் பெறும் கடன்தாரருக்கு, வேறு எந்த வங்கியும் கடன் வழங்காது. மேலும், கடன்தாரர் புகைப்படமும் பத்திரிகைகளில் வெளியாகும்.இது தவிர, பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன்களை வசூலிக்கவும்,நலிந்த நிறுவனங்களை புனரமைக்கவும்,தேசிய சொத்து நிர்வாக நிறுவனம் என்ற, அமைப்பை உருவாக்குவது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இத்துடன்,வசதி இருந்தும் கடனை திரும்ப செலுத்தாதோர் பட்டியலில் உள்ளோர் மீது, கிரிமினல் வழக்கு தொடுக்கும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ளவும், நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான விதிமுறைகள்உருவாக்கப்பட்டு வருவதாக, பொதுத் துறை வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:ஒருவர், வங்கியில் எதற்காக கடன் பெற்றாரோ, அதற்கு மாறாக, சுய லாபத்திற்காக, அத்தொகையை வேறு வழியில் பயன்படுத்தினால், அவர், திட்டமிட்டு கடனைசெலுத்தாதவர் பிரிவில் சேர்க்கப்படுவார்.

அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கலாம்.அத்தகையவர், ஒரு நிறுவனத்தை உருவாக்கிய வராகவோ அல்லது அந் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இயக்குனராகவோ இருந்தால், அவர், வேறு எந்த நிறுவனத்திலும், இயக்குனராக முடியாது.

விதிமுறைகள்மேலும்,கடன்தாரரின் பாஸ்போர்ட் முடக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை, நிதியமைச்சகம் உருவாக்கி யுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிதியமைச்சகம், முதற்கட்டமாக, 50 கடனாளி களின் பட்டியலை தயாரித்து, அவர்களிடம் இருந்து கடன் தொகையை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வங்கிகளிடம் தெரிவித்துள்ளது. 

மேலும்,கடன் பெற்ற நிறுவனங்களுக்கு, கூடுதல் கடன் வசதி வழங்கக் கூடாது என்றும், அதன் நிறுவனர்களின், புதிய நிறுவனங்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு கடன் வழங்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
விஜய் மல்லய்யாவுக்கு நோட்டீஸ்:யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, 350 கோடி ரூபாய் கடன் தொடர்பாக, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதேபோன்று, ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கிகள் 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்கியுள்ளன. இந்த கடன் பாக்கியை வசூலிப்பது தொடர்பாகவும் வங்கிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.– 

No comments:

Post a Comment