Monday, June 30, 2014

ஜெ. வருமான வரி வழக்கு விசாரணை ஜூலை 24-க்கு ஒத்திவைப்பு


தி இந்து:திங்கள், ஜூன் 30, 2014

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கு தொடர்பான விசாரணை ஜூலை 24-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர குற்றவியல் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் (பொருளாதாரக் குற்ற வழக்குகள்) நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், ஜெயலலிதா, சசிகலா இருவருமே வருமான வரித்துறைக்கு அபராதம் செலுத்தி வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தனர். எனவே வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு வாதிட்டனர்.

இதனையடுத்து நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி வழக்கு விசாரணையை ஜூலை 24-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கடந்த 1991 – 92 மற்றும் 1992 – 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

No comments:

Post a Comment