Wednesday, July 10, 2013

""நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற வேண்டும்,''

புதுடில்லி :ஜூலை 07,2013,23:47 IST

""புதுடில்லி :""நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் கூறியுள்ளார்.

நாட்டின், 40வது தலைமை நீதிபதியாக, இம்மாதம், 19ம் தேதி பொறுப்பேற்க உள்ள சதாசிவம், நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:மாநில ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் நியமனத்தில், இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற வேண்டும் என, சட்டம் கூறவில்லை. எனினும், இப்போதுள்ள நிலையை கவனத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் நீதிபதிகளாக பதவியேற்க வழிவகை செய்ய வேண்டும்.

இப்போதுள்ள நிலைமைப்படி, கல்வித்தகுதி, திறமை அடிப்படையில் தான், நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். நீதிபதிகளாக, இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினர் அதிக அளவில் பொறுப்பேற்க வேண்டும். இதை, நீதிபதிகள் நியமிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், தங்கள் மனதில் கொள்ள வேண்டும்.ஏனெனில், நம் நாட்டில், பல வித மதங்கள், கலாசாரங்களைக் கொண்டவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் தொடர்பான வழக்குகள், நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக, இது போன்ற வழக்குகள், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க, வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி சதாசிவம் கூறினார்.என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் கூறியுள்ளார்.

நாட்டின், 40வது தலைமை நீதிபதியாக, இம்மாதம், 19ம் தேதி பொறுப்பேற்க உள்ள சதாசிவம், நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:மாநில ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் நியமனத்தில், இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற வேண்டும் என, சட்டம் கூறவில்லை. எனினும், இப்போதுள்ள நிலையை கவனத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் நீதிபதிகளாக பதவியேற்க வழிவகை செய்ய வேண்டும்.

இப்போதுள்ள நிலைமைப்படி, கல்வித்தகுதி, திறமை அடிப்படையில் தான், நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். நீதிபதிகளாக, இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினர் அதிக அளவில் பொறுப்பேற்க வேண்டும். இதை, நீதிபதிகள் நியமிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், தங்கள் மனதில் கொள்ள வேண்டும்.ஏனெனில், நம் நாட்டில், பல வித மதங்கள், கலாசாரங்களைக் கொண்டவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் தொடர்பான வழக்குகள், நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக, இது போன்ற வழக்குகள், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க, வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி சதாசிவம் கூறினார்.

No comments:

Post a Comment