Wednesday, October 1, 2014

ரூ.100 கோடி அபராதம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கருத்து



தி இந்து:புதன், அக்டோபர் 1, 2014

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது.

அந்த சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடை பெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தலைமை யில் நடந்த கூட்டத்தில், “ஜெயலலிதா அனுமதி தந்தால் சிறையில் இருக்கும் அவர் ஜாமினில் விடுதலை ஆவதற்கு சட்ட ரீதியான உதவிகளை சங்கம் மேற்கொள்வது” என்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

மேலும், “நீதிமன்ற தீர்ப்புகள் நீதித்துறையின் கண்ணியத் தையும், மாண்பையும் போற்றும் விதத்தில்தான் இருக்க வேண்டும். மாறாக ரூ.100 கோடி அபராதம் விதிப்பதன் மூலம், ஒருவர் ஜாமினில் கூட வெளிவர முடியா மல் செய்வது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரானது.
காவேரி பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் வகையில் கர்நாடக அதிகாரிகள் செயல்படுவதாகவும், சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. அதிகாரிகளின் அத்தகைய நடவடிக்கைகளை வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment