Thursday, December 19, 2013

புதிய பெண் நீதிபதி வி.எம்.வேலுமணி வாழ்க்கை குறிப்பு




Madras highcourt advocates association Dec 19 2013


சென்னை ஐகோர்ட்டின்

புதிய பெண் நீதிபதி வி.எம்.வேலுமணி வாழ்க்கை குறிப்பு


சென்னை, டிச.19-

சென்னை ஐகோர்ட்டில் புதிய கூடுதல் நீதிபதியாக விவசாய குடும்பத்தை சேர்ந்த 

வி.எம்.வேலுமணி நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்க உள்ளார்.

கூடுதல் நீதிபதி

சென்னை ஐகோர்ட்டில் அரசு சிறப்பு பிளீடராக பணியாற்றி வருபவர் வக்கீல் 

வி.எம்.வேலுமணி. இவரை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 

நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, புதிய நீதிபதி வி.எம்.வேலுமணி நாளை (20-ந் தேதி) பதவி ஏற்கிறார். அவருக்கு 

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால் பதவி பிரமாணம் செய்து வைக்க 

உள்ளார்.

புதிய நீதிபதி வேலுமணியின் சொந்த ஊர், திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, 

கணக்கன்பட்டி கிராமமாகும்.

விவசாய குடும்பம்

இவரது தந்தை மறைந்த கே.வீரப்பகவுண்டர் விவசாயி. தாயார் வி.மயிலாத்தாள். நீதிபதி 

வேலுமணி 6.4.1962 அன்று பிறந்தார். இவரது மூத்த சகோதரர் வி.மங்களகவுண்டர், கரூர் 

வைஷ்யா வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இரண்டாவது சகோதரர் அப்பாதுரை 

சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது மூத்த சகோதரிகள் நீலமேகமங்கை, ஜி.செல்வம் திருமணமாகி கணவர்களுடன் 

சொந்த 

ஊரில் வசித்து வருகின்றனர்.


காமராஜர் பல்கலைக்கழகம்

நீதிபதி வேலுமணி, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கணக்கன்பட்டி பஞ்சாயத்து 

யூனியன் பள்ளிக்கூடத்திலும், 9 மற்றும் 10-ம் வகுப்பு ஐ.டி.ஓ. பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் 

வகுப்பு வரை பழனி அரசு பெண்கள் பள்ளியிலும் படித்தார்.

பி.ஏ. பட்டத்தை பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கல்லூரியிலும், எம்.ஏ. (அரசியல்) 

பட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

அரசு வக்கீல்

இதன்பின்னர், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டம் 

பெற்று 13.9.1989 அன்று வக்கீலாக பதிவு செய்தார்.

அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜியிடம் ஜூனியராக சேர்ந்தார். 1998-1999-ம் ஆண்டுகளில் 

மத்திய அரசு வக்கீலாகவும், 2001-2006-ம் ஆண்டுகளில் தமிழக அரசின் கூடுதல் அரசு 

பிளீடராகவும் பணியாற்றினார். 2011-ம் ஆண்டு முதல் சிறப்பு பிளீடராக இப்போது பணியாற்றி 

வந்தார். இந்த நிலையில், அவர் சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்க 

உள்ளார்.

No comments:

Post a Comment