Monday, March 18, 2013

இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க பிரதமருக்கு வக்கீல்கள் தந்தி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
Thamizh Murasu :18 March 2013

காஞ்சிபுரம்: தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.

தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் ரகுநாதன், பொருளாளர் மணி முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் பார் அசோசியேஷன் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வழக்கறிஞர்கள் சேம நலநிதியை ரூ. 5.25 லட்சமாக உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி. புதுவை வழக்கறிஞர்களுக்கும் இதுபோல் நிதி கிடைக்க செய்யவேண்டும்.


வழக்கறிஞர்களுக்கு எதிராக பொய் வழக்கு போடும் போலீசாரை தவிர்க்கும் வகையில் உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட அளவில் அமைதிக்குழு அமைக்க வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானங்கள் கொண்டுவர வலியுறுத்தி பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நீதிமன்றங்களில் காலி பணியிடங்களை நிரப்பி உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதில், பார் கவுன்சில் உறுப்பினர்கள் ரங்கநாதன், கதிரவன், துணைத் தலைவர் ராம்குமார் கலந்து கொண்டனர். நிர்வாக குழு உறுப்பினர் எழிலரசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment