Monday, March 11, 2013

தொடர் மோதல் எதிரொலி : போலீஸ் சீர்திருத்த சட்டம் ; மத்திய, மாநிலஅரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்




தினமலர் மார்ச் 11,2013,14:49 IST

புதுடில்லி: போலீஸ் சீர்திருத்தம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய , மாநிலஅரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 இதில் ஏற்கனவே போலீஸ் சீர்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறபித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன் எனவும் விளக்கம் கேட்டுள்ளது. 

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதை பல்வேறு டி.வி. சானல்கள் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன. ராஜஸ்தானில் போராட்டம் நடத்திய வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பீகாரில் கடந்த 5-ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஆசிரியர்கள மீது போலீசார் தடியடி நடத்தினர். 

பஞ்சாப் மாநிலம் தாரன்தாரன் நகரில், போலீசாரிடம் பாலியல் புகார் கொடுக்க சென்ற பெண் ஒருவரை கடந்த 4-ம் தேதி போலீசார் சரமாரியாக தாக்கியும் பிடித்தும் தள்ளினர்.இது போன்ற விவகாரங்கள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பாயின . 

இதையடுத்து சுப்ரீம் கோர் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது. அதில் ராஜஸ்தான், பஞ்சாப், பீகார் ஆகிய மாநிலங்களில் நடந்த போலீசாரின் அராஜகங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, தலைமையிலான நீதிபதிகள், போலீஸ் சீர்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏன் மதிக்கவில்லை என, மத்திய அரசு, உள்துறை அமைச்சகம், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின், தலைமை செயலர்கள், உள்துறை செயலர்கள், மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி 7 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

போலீஸ் சீர்திருத்த சட்டம் என்னாச்சு ? 

ஏற்கனவே நாட்டின் போலீஸ் சீர்திருத்தம் கோரி மாஜி டி.ஜி.பி. பிரகாஷ்சி்ங் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த வழக்கில் அனைத்து மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட் உத்தரவினை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment